மஞ்சள் மாநகரம்

ஈரோடு (Erode)..

இதுக்கு ரெண்டு பேரு இருக்குங்க. ஒண்ணு பெரியார் மாவட்டம், இன்னொன்னு மஞ்சள் மாநகரம்.

தொன்றுதொட்டுன்னு ஆரம்பிச்சா, பேச நிறைய இருக்குங்க. காளிங்கராயன் வாய்க்கால்ல இருந்து பவானி ஜமக்காளம் வரைக்கும், மணிக்கூண்டு பன்னீர் செல்வம் பார்க்குல இருந்து மேட்டூர் டேம் வரைக்கும் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு கதை இருக்கு. அத எல்லாம் போகப்போக பார்க்கலாம்.

பெரும்பள்ளம், காளிங்கராயன் வாய்க்கால் பாயற இந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு ஈரோடைன்னு பேருங்க. அது மருவி ஈரோடுன்னு மாறிடுச்சு.

1979 – வரைக்கும் கோயம்புத்தூர்ல ஒரு பகுதியா ஈரோடு இருந்தது. அடுத்ததா தனி முனிசிபாலிட்டியா மாறிச்சு. வெறும் 8.4 கி.மீ. பரப்பளவுல இருந்த ஈரோடு கிரேடு 3-க்கு 2011-ல அந்தஸ்து பெற்றது. அப்புறமா பெருந்துறை, சத்தி, கோபி, பவானி, மொடக்குறிச்சி அதில்லாம இன்னும் 5 தாலுகாக்களை ஒண்ணா இணைக்கறது நம்ம ஈரோடு. ஓவர் நைட்டுல 108 கி.மீ. பரப்பளவுக்கு விரிவடைஞ்சு தனி முனிசிபல் கார்ப்பரேஷன்-ஆ மாறிச்சு.

அதிக கிராமப் பரப்பு இருக்கற ஒரு சிட்டி ஈரோடு. அதனால இங்க விவசாயம் அதிகம். காளிங்கராயன் வாய்க்காலுக்கு முன்னால இருந்து புன்செய் நிலங்கள் மட்டும் இருந்த ஈரோட்டுல பிரிட்டிஷ் ஆட்சியில இருந்தே மஞ்சளுக்கு பெரிய மவுசுதாங்க. அதுமட்டுமில்லாம கரும்பு, எள் மாதிரியான பயிர்களை அதிகம் விளைவிக்கப்படுது.

விவசாயத்துக்கு அடுத்த படியா இருக்க விஷயம் நெசவும், ஜவுளியும் தாங்க. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜவுளி மொத்த விற்பனை மையம் அப்துல் கணி மார்க்கெட் தான். அப்பறமா இப்போ டெக்ஸ் வேலி. இதவிட உச்சக்கட்டமா பவானி ஜமக்காளத்துக்குப் பின்னாடி 300 வருஷ வரலாறு இருக்குங்க. முதல்முறையா பிரிட்டிஷ் துணிகளை தோற்கடிச்சாங்க நம்ம நெசவாளர்கள். இன்னமும் 5000+ powerloom industries ஈரோடுல இருக்குங்க. இன்னுமே ஒவ்வொரு ஏரியாலயும் கொறைஞ்ச பட்சமா ஒரு தறியாவது ஓடுங்க.

பேசறத விட சாதிக்கறதுல தாங்க சுவாரஸ்யமே. ஆனா, சாதிக்கறதுல கூட சாதிய விரும்பாத பெரியார் பொறந்த மண்ணுங்க எங்க ஈரோடு. ஒடுக்குதலுக்கு எதிரா குரல் கொடுக்கற பெரியாரிஸம் பேசற மக்கள் இருக்க ஊருங்க.

எந்த வேறுபாடும் இல்லாம, எல்லா மக்களையும் இணைக்கறது திருவிழாதாங்க. மாநகரத்தோட மூணு எல்லைல இருந்து மொத்த ஈரோட்டையும் இணைக்கிறதுல முக்கிய பங்கு மாரியம்மன் கோவில் திருவிழாங்க.

உலகத்துல இருக்க கால்நடைகளையும் மக்களையும் இணைக்க திப்பு சுல்தான் தொடங்கி வெச்ச அந்தியூர் குருநாத சுவாமி கோவிலும் குதிரை சந்தையும் தாங்க. காட்டையே காப்பாத்தற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, CSI சர்ச் நியூ இயர் திருவிழா, ஆடி 18 பவானி திருவிழா, கூடுதுறை மகா புஷ்கரம்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம்ங்க. இது எல்லாத்தையும் விட பெரிய திருவிழான்னா ஈரோடு புத்தகத் திருவிழாதாங்க. இங்க புத்தகம் மட்டும் இல்லீங்க, சிந்தனைகளும் பகுத்தறிவும் பாகுபாடு இல்லாம கிடைக்கற எடம் தான் இது. அப்துல் கலாம் பேசுன எடங்க. அப்போ அது கண்டிப்பா திருவிழாதாங்க.

கீழடி மட்டும் இல்லீங்க கொடுமணலும் தமிழர் வரலாறு பேசும். வேடந்தாங்கல் மட்டும் இல்லீங்க வெள்ளோடும் பறவைகள் சரணாலயம் தான்.

content இவ்ளோ தூரத்துக்கு வந்தாச்சு. அதனால கொஞ்சம் statistics, mathematics, geography, history-லாம் சேத்துக்கலாம்.

ஈரோடு 109.52 sq km இருக்க ஒரு நகரம். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 5,21,776, 10 தாலுகா, 42 டவுன் பஞ்சாயத்து,

230 கிராம பஞ்சாயத்து, 325 வருவாய் கிராமங்கள், 2,28,750 ஹெக்டர் அடர்ந்த காடுகள், மொத்த நகரத்துல 27.7% பரப்பளவு காடு, 39.2% விவசாய நிலங்கள், அதுல 98,850 ஹெக்டேர் வாய்க்கால் பாசனத்திலும், 68,520 கிணற்றுநீர் பாசனத்தையும், நீர் ஆதாரமா மழை, காவிரி, நொய்யல் இருக்கு. கீழ்பவானி பாசனத் திட்டம் செயல்பாட்டுக்குத் தயாராகிவிட்டது. தமிழ்நாட்டிலேயே 40.32% மக்கள் இண்டஸ்ட்ரிய டிபென்ட் பண்ணி இருக்கவங்க. ஈரோட்டுல டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி ஆதிக்கம் அதிகம். ஹேண்ட்லூம்னு சொல்லப்படற கைத்தறி மற்றும் பவர்லும் அதிக மக்கள் பயன்பாட்டுல இருக்கு. அதேபோல spinning mills, carpet manufacturing, cotton fabrics, furnished fabrics உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அது மாதிரியே தான் dying units, shirt printing புதுசா வளந்துட்டு வர்ற தொழில்.

அடுத்த பாரம்பரிய தொழில் அரிசி மில்லுகள். இந்தியாவுல பல இடங்கள்ள உற்பத்தி செய்யப்படற நெல் வேக வெச்சு ஈரோடு மில்லுகள்ள அரிசியா மாறி கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுது.

60+ tanning இண்டஸ்ட்ரி இருக்கு. 50+ food processing அதாவது skm egg products and animal feeds, sakthi masala மாதிரியான இண்டஸ்ட்ரிஸ் ஓட பிறப்பிடம் ஈரோடு தான். தேசிய கட்டுமானத்துல முக்கிய பங்கு வகிக்கற construction companies, urc, rpp எல்லாமே ஈரோடை சேந்தது தான். 24,130 59-க்கும் அதிகமான small scale இண்டஸ்ட்ரி, 59+ large scale இண்டஸ்ட்ரிஸ் ஈரோடை மையமா வெச்சு இயங்குது.

பவானி ஜமக்காளத்துக்கும், ஈரோடு மஞ்சளுக்குமான பாரம்பரிய சந்தை  இப்போ வரைக்கும் இருக்கு. ரெண்டுமே வெளிநாட்டு ஏற்றுமதியில முக்கிய இடம் பிடிச்சிருக்கு. ஈரோடு மஞ்சளுக்கும், பவானி ஜமக்காளத்துக்கும் GI Tag அப்படிங்கற தேசிய அடையாளக் குறியீடு ஈரோட்டுக்கு சொந்தமானது.

தமிழ்நாட்டோட மொத்த ad revenue ல 3-ல் ஒரு பங்கு ஈரோடு உடையது.

இந்தப் பதிவு ஈரோட்டைப் பத்தி one minute one book-ஆல் தொகுத்து எழுதப்பட்டு, Erode 360-ங்கற youtube சானல்ல Erode day அன்று வெளியிடப்பட்டது. சில திருத்தங்களுடன் உங்களுக்காக.

#one_minute_one_book #tamil #book #review #erode #yellow_city

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: