சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கு, திடீரென நடிகையாகும் வாய்ப்பு கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் அவள், தன்னுடைய காதலைத் தியாகம் செய்ய நேரிடுகிறது. பிரபல நடிகரின் சூழ்ச்சியால் நடிகையான அவளுக்கு பின்னால் பின்னப்பட்டிருக்கும் சதியை அவள் உணரும்போது அவளுடைய காதலனை இழக்கிறாள். எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக தன்னுடைய காதலை இழந்தாலோ அவர்களின் சுயரூபம் அந்த நடிகைக்குத் தெரியவர, குழப்பத்தில் இருந்த அவள் சாவைத் தேர்ந்தெடுத்துப் பின் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறாள். குடும்ப சூழல் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடும் என்பதற்கு இந்தக் கதையில் வரும் நடிகையான ஹரிணியே மிகச் சிறந்த உதாரணம்.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=326
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #jannal_nila
Leave a Reply