சங்க நூல்களில் மரங்கள்

“அத்தி, அரையம், ஆசினி, ஆத்தி, ஆலம், இத்தி, இரத்தி, இலஞ்சி, இலுப்பை, இல்லம், உழிஞ்சில், உன்னம், ஒடு, ஓமை, கடு, கண்டல், காஞ்சி, குழில், குருந்து, சந்தனம், செயலை, ஞாழல், ஞெமை, தில்லை, தேக்கு, நாகம், நொச்சி, பயின், புன்கு, பெரு, மயிலை, மருதம், முருங்கை, மூங்கில், யா, வஞ்சி, வழை, வாகை, விடத்தேர், வேங்கை, வேம்பு.”

படிக்கும்போதே தெரிஞ்சிருக்கும் புரிஞ்சும், புரியாத இந்த வார்த்தைகள் எல்லாமே மரங்களின் பெயர்கள்தான். ஆனால், சங்க காலத்துல பயன்படுத்தப்பட்ட மரங்களின் பெயர்கள். இதில் சில பெயர்கள் வழக்கு சொற்கள், மற்றவை நமக்கு தெரிந்த மரங்களின் வேறு பெயர்கள். அவ்வளவுதான் வித்தியாசம். சங்க கால நூல்களில் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை, மலைபடுகடாம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, சிலப்பதிகாரம், நாலடியார், திரிகடுகம், பரிபாடல், பெருங்கதை, பிரமோத்திர வஞ்சுளை முத்தி, பதிற்றுப்பத்து, சிறுபஞ்சமூலம், யாப்பருங்கலவிருத்தி, பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, திணைமாலை நூற்றைம்பது, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, சீவகசிந்தாமணி) மரங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் குடுத்திருக்காங்கனா..? அதுக்கும் காரணம் இருக்கு..

சங்க நூல்கள்ள உவமை, ஒப்பீடு, உருவகங்களுக்காக நிறைய மரங்களை மையமா வெச்சு பல புலவர்கள் அவங்களோட கருத்தை சாதாரண மக்களுக்கும் புரியும்படியா எளிமையா விளக்கியிருக்காங்க. இது நம் சங்க கால புலவர்களின் தனிச்சிறப்பு.

மரத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டதோடு நில்லாமல் அவற்றின்  அறிவியல் பெயரையும், மரங்களின் வழக்கில் உள்ள பெயர்களையும் ஆராய்ந்து குறிப்பிட்டிருப்பது ஆசிரியருக்கும் இப்புத்தகத்திற்கும் தனிச்சிறப்பு.

#one_minute_one_book #tamil #book #review #interesting #informative #sanga_noolgalil_marangal

want to read free : https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU6lZUy/mode/2up

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: