“தகவல்! தகவல்! தகவல்!
எனக்கு நிறைய தகவல் தேவை…”
தகவல்களையும், அறிவியல் விநோதங்களையும் தேடிப் படிக்கிற மனோபாவம் பொதுவா சின்னவங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் இருக்கும்.
அப்படிப்பட்டவங்களுக்கு ஒரு அருமையான புதையல்னே சொல்லலாம் என்.ராமதுரை எழுதுன “அறிவியல் எது? ஏன்? எப்படி?”-ங்கற புத்தகம்.
இதுல அப்படி என்ன சிறப்பா இருக்கப் போகுதுன்னு நிறைய அறிவியல் கட்டுரைகளைப் படிச்சவங்களுக்குத் தோணலாம்.
தலைப்பு:
ஒரு தகவலை மனசுல பதிய வெக்கணும்னா நமக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவசியமான விசயம். இதுல இருக்க ஒவ்வொரு தலைப்பும், வேடிக்கை வித்தியாசம் நிறைஞ்சது. நமக்கு வாசிச்ச உடனே “curiosity”-ங்கற ஒரு அற்புதமான விசயத்தைத் தோற்றுவிக்கும்.
கட்டுரைகள்:
ஒரு நிமிஷத்துக்கு குறைந்தபட்சம் 60 வார்த்தைகளைப் படிக்க முடிஞ்சாலும் 5 நிமிஷத்துல ஒரு முழுக்கட்டுரையையும் வாசிச்சு முடிக்க முடியும்.
தினசரி காலண்டர் தத்துவம் மாதிரி, தினசரி ஒரு அறிவியல் தகவல்னு வாழலாம்.
இந்தப் புத்தக வரிசைல 2 பாகங்கள் உண்டு. ஒவ்வொரு புத்தகமும் தனக்குள்ள 70 வித்தியாசமான தலைப்புகள்ள உங்கள புது தேடலுக்கு ஆளாக்கிடும்.
கட்டுரைகள் ரத்தின சுருக்கமா இருந்தாலும் விவரிக்காத பெயர்களும், வார்த்தைகளும் நம்மைத் தேடலுக்கு உட்படுத்தி ஜாலங்கள் புரியும்.
வாசிப்பும்…தேடலும்…தொடரட்டும்..One Minute One Book உடன்.
#one_minute_one_book #tamil #book #review #science #n.ramadurai #ariviyal_edhu_yen_eppadi
Leave a Reply