நீலேஷ் கம்பெனி விஷயமாக ஃபாரீன் சென்றுவிட்டதால், நிர்வாகப் பொறுப்பை சில மாதங்களுக்கு தங்கை திலக்ஷனா பார்த்துக்கொண்டிருந்தாள். தங்கள் கம்பெனியின் பெயிண்ட் ஃபார்முலா வேறொரு கம்பெனிக்கு விற்கப்பட்டதை அறிந்த திலக்ஷனா, அதற்கு காரணமான கணேஷமூர்த்தியை சஸ்பென்ட் செய்கிறாள். கோபத்தில் கொதித்த கணேஷமூர்த்தி திலக்ஷனாவைப் பழிதீர்க்க மோசமான ஒரு திட்டம் தீட்டுகிறான். இதற்கிடையில் மூணுமாத கர்ப்பிணியான நிவேதனா, நீலேஷைத் தேடிக்கொண்டு புனேவில் இருந்து வந்து எதிர்பாராதவிதமாக கோமா நிலைக்கு செல்கிறாள். அவ்வப்போது கோமாவில் இருந்து நினைவு திரும்பும் நிவேதனா யார்..? கணேஷமூர்த்தியிடம் இருந்து திலக்ஷனா தப்பித்தாளா..? நீலேஷைத் தேடிவந்த அந்தப் பெண்ணிற்கும் நீலேஷிற்கும் என்ன சம்மந்தம்..? அடுத்தடுத்த விறுவிறுப்பான திருப்பங்களுடன் எதிர்பாராத வகையில் கதை நகர்ந்திருக்கும்.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #ullatthai_killadhe
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=373
Leave a Reply