வேலை கிடைத்த சந்தோசத்தின் உச்சத்தில் இருந்த ஹரிஷின் தலைக்குள் திடீரென ஒரு பிரளயம் ஏற்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிய அப்படியே சரிந்தான் அவன். ஹாஸ்பிடலில் அவனுக்கு எய்ட்ஸ் நோய் என்று ரிப்போர்ட் வருகிறது. அங்கேயே அவனுடைய அம்மா இறக்க, காதலி மீரா அவனை விட்டு விலக, இதனால் மனநோயாளியாகிறான் ஹரிஷ். ஸ்டெரிலைஸ் செய்யப்படாத ஊசி போட்டுக்கொண்டதால் தான், தனக்கு எய்ட்ஸ் வந்திருப்பதாக டாக்டர் ஒருவர் சொன்னதை நம்பிய ஹரிஷ் டாக்டர்களை வெறுக்கிறான்.
தன்னுடைய ரத்தத்தால் “ஐ ஹேட் டாக்டர்ஸ்” என்று சுவரில் எழுதிவைத்த அவன், ஹாஸ்பிடலில் இருந்து தப்பித்து வரிசையாக டாக்டர்களைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்கிறான். அடுத்ததாக தன்னை விட்டு விலகிய மீராவையும் கொலை செய்கிறான். ஆபத்தை உணர்ந்த போலீஸ் ஹரிஷைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு போலீஸ் பட்டாளத்தையே அனுப்புகிறது.
இதற்கிடையில் விபத்தில் மாட்டிய ஹரிஷ், பெண் மருத்துவர் பார்கவியிடம் சிக்குகிறான். திடீர் திருப்பமாக நடந்த கொலைகளுக்கும் ஹரிஷுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதை போலீஸ் கண்டுபிடிக்க, உண்மையான குற்றவாளியைப் பற்றி புக்கைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க..
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #thik_thik_december
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=626
Leave a Reply