பணம்..பதவி..பலி..! – Crime Novel

MLA எலக்சனில் அமோக வெற்றி பெற்ற உற்சாகக் களிப்பில் இருந்த மாணிக்கராஜுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் மந்திரிப் பதவியேற்றால் உயிர் பறிக்கப்படும் என்றிருக்க, அந்த மொட்டைக் கடுதாசியைக் குப்பையில் கிழித்துப் போட்டார் மாணிக்கராஜ்.

விதி வலியது..முதல்வரை சந்திக்கச் சென்னை செல்ல இருந்த மாணிக்கராஜ் ரயில்வே ஸ்டேஷனில் வைத்தே கொலை செய்யப்படுகிறார். இதற்கடுத்ததாக முதல்வராகப் போகும் ராமபத்ரனுக்கு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த மிரட்டல் கடிதத்தில் ஐந்து பேரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மந்திரி பதவி தரக்கூடாது என்றிருந்தது. இதில் நான்கு பேர் உயிர் பயத்தினால் மந்திரி பதவியை மறுக்க, கோசலைராமன் மட்டும் விடாப்பிடியாக மந்திரி பதவி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறார்.

ஆனால், கோசலைராமனுக்கு பதிலாக மந்திரி பதவியை விட்டுகொடுத்த அமிர்தப்பிரியன் கொலைசெய்யப்பட, திணறுகிறது போலீஸ். கொலைகாரனின் அடுத்த குறி கோசலைராமன்மீது வைக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாகத் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்கிறார் கோசலைராமன்.

தொடர்ந்து நிகழவிருக்கும் கொலைகளுக்கெல்லாம் யார் காரணம்..? கொலைகாரனின் அடுத்த குறி யார்..? பணத்தினால் வாங்கப்படும் பதவியானது உயிரைப் பலிகேட்கும் என்பதே இந்தக் கதையின் மையக்கரு.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #panam_padhavi_pali

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=549

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: