நந்தி ரகசியம்

கோவிந்தராஜ உடையார் இறப்பதற்கு முன் அவருடைய மொத்த சொத்துக்களையும் தன்பேரில் எழுதி வாங்கிக்கொண்டாள் சிந்தாமணி. கோவிந்தராஜ உடையாரிடம் ஒண்டிப்பிழைக்க வந்த சிந்தாமணி, உடையாரின் மனைவி திரௌபதியையும் புத்தி சுவாதீனமில்லாத மகன் வேலப்பனையும் விரட்டிவிட்டாள். பரம்பரை சொத்தான பொட்டல் காட்டை மட்டும் திரௌபதியின் பேரில் எழுதிவிட்டாள் சிந்தாமணி.

நடப்பது எதையும் கண்டும் காணாமல் இருந்த ஊர்மக்களால், திரௌபதியையும் வேலப்பனையும் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. கருநாகங்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் பொட்டல்வெளியில் இருந்தது ஒரு சிவன் கோவில்.

இடிந்த சிவன் கோவிலைப் பள்ளிக்கூடமாக மாற்றிய தன்னுடைய முன்னோர்களின் பாவச்செயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மோகனை, சிவன் சொத்து குல நாசம் என்பதை விளக்கி, சிவன் கோவிலைப் பராமரிக்கச்  சொல்கிறார் தீட்சிதர் ஒருவர்.

திரௌபதியும் வேலப்பனும் அந்தக் கோவில் நிலத்தில் காலடி எடுத்துவைத்த நேரம், வேலப்பனுக்கு புத்தி தெளிவடைகிறது. அதேநேரத்தில் சிவன் கோவிலுக்கு திருப்பணி செய்ய வந்த மோகனும் அந்தக் கோவிலில் இருக்கும் நந்தியை சுற்றிவர, அவனுடைய வாழ்விலும் வெளிச்சம் வருகிறது.

இந்நிலையில் மொத்த சொத்தையும் விற்றுவிட்டு சென்னையில் செட்டிலாக நினைக்கும் சிந்தாமணியை வக்கீல் வாதிராஜ் ஏமாற்றிவிட்டு மொத்தப் பணத்தோடு ஊரைவிட்டு ஓட, சிந்தாமணி திரௌபதியிடம் சரணடைகிறாள். அனைவரும் நந்தியிடம் முறையிட சொத்து திரும்பக் கிடைக்கிறது.

எல்லா அதிசயங்களையும் நிகழ்த்திக் கொண்டிருந்த நந்தி ஒருநாள் திடீரென திருடு போகிறது. அபூர்வ சக்தி வாய்ந்த நந்தியைத் திருடியது யார்..? எனும் உண்மையைத் தேடி அலைந்த மோகனுக்கு மட்டுமே தெரியவந்த உண்மை என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #mysteric #indira_soundarajan #nandhi_ragasiyam

want to buy :

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: