ஊருக்கு நல்லது சொல்வேன்..!

தாய்மைக்கு உதாரணமாக காந்தாரியும்..

துறவுக்கு உதாரணமாக விவேகானந்தரும்..

குடும்பத்துக்கு உதாரணமாக டால்ஸ்டாயும்..

புலனடக்கத்துக்கு உதாரணமாக புகழ்பெற்ற தத்துவஞானி டயோஜனிஸும்..

அன்பு தான் மதம் என்று மதத்திற்கு உதாரணமாக காந்தியும்..

மனிதத்துக்கு உதாரணமாக ஏசுவும்..

நட்புக்கு உதாரணமாக மார்க்ஸும்..

நன்றிக்கு உதாரணமாக சிசரோவும்..

முயற்சிக்கு உதாரணமாக ஐன்ஸ்டீனும்..

வாழ்க்கைக்கு உதாரணமாக புத்தரும்..

தானத்துக்கு உதாரணமாக குருநானக்கும்..

ஆசைக்கு உதாரணமாக நெப்போலியனும்..

நேர்மைக்கு உதாரணமாக லால்பகதூர் சாஸ்திரியும்..

மன்னிப்புக்கு உதாரணமாக நபிகளும்..

அடிக்கற்களுக்கு உதாரணமாக பகத்சிங்கும்..

ஊக்கத்திற்கு உதாரணமாக மைக்கேல் ஏஞ்சலோவும்..

திறவுகோலாக அன்னை தெரேசாவும்..

காதலுக்கு உதாரணமாக ஹிட்லரும்..

மரியாதைக்கு உதாரணமாக நேதாஜியும்..

மரணத்துக்கு உதாரணமாக ஔரங்கசீப்பும்..

அடக்கத்துக்கு உதாரணமாக அப்பரும்..

பெண்ணுக்கு உதாரணமாக செல்லம்மாளும்..

கற்புக்கு உதாரணமாக கண்ணகியும்..

என எடுத்துக்கொண்ட தலைப்புகளில் எவ்வித பாகுபாடும் காட்டாமல், மேலைநாட்டு வாழ்வியல் முறைகளில் இருந்து தாய்த் திருநாட்டின் வாழ்வியல் முறைகள் வரை அனைத்து மேம்பட்ட கருத்துக்களையும் இப்புத்தகத்தில் நாம் காணலாம்.

வெறும் கருத்துக்களாக மட்டுமல்லாமல், அனைத்து தலைப்புகளையும் ஆராய்ந்து எழுதியிருப்பது ஆசிரியரின் நோக்கத்தைத் தெளிவாக நமக்கு புலப்படுத்துகிறது.

தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும், வாழ்வியல் நெறிகளையும் ஒரே புத்தகத்தில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருப்பது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு.

இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருக்குள்ளும் கண்டிப்பாக ஒரு மாற்றம் நிகழும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

“நான் படித்த புத்தகங்களும், பாதித்த அனுபவங்களும், சந்தித்த மனிதர்களும் எனக்குள் ஏற்படுத்திய அறிவின் தெளிவில் வந்து விழுந்த வார்த்தைகளின் தொகுப்பு இது.”

                                                   -தமிழருவி மணியன்

#one_minute_one_book #tamil #book #review #all_time_interest #tamilaruvi_manian #oorukku_nallathu_solven

want to buy :

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: