எங்கும் விவேக்..! எதிலும் விவேக்..!

அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளவிருக்கும் விஞ்ஞானிகளைக் கொல்வதற்கு டைனமைட்டை வெடிக்க வைக்க அந்தக் கூட்டத்திலேயே ஒரு கருப்பு ஆடு இருக்கிறது. இதுபற்றி உளவுத்துறைத் தலைவர் சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது.

உதவிக்கு விவேக்-விஷ்ணுவைக் கூப்பிட்ட உளவுத்துறைத் தலைவர், அந்தக் கருப்பு ஆடு யார் என்பதையும், அவருக்கு கிடைத்த தகவல் பற்றியும் கூற, விசயத்தைக் கேள்விப்பட்ட விவேக் திடுக்கிட்டான்.

கதையில் திடீர் திருப்பமாக ரகசிய தகவல் கொடுத்த ராஜமாணிக்கத்தின் சலடம் போலீசிற்கு கிடைக்கிறது. இதற்கடுத்ததாக ராஜமாணிக்கத்தின் காதலி புவனேஸ்வரியைக் கொலைவெறியுடன் ஒரு கும்பல் துரத்துகிறது.

உளவுத்துறைத் தலைவரின் ஆணையின்படி, விவேக்-விஷ்ணு இருவரும் ரகசிய தகவலின்படி சந்தேகிக்கும் விஞ்ஞானி ராஜ்நாத்தின் எஸ்கார்ட்டாகச் செல்கின்றனர். ஆனால் எதிர்பாராத வகையில் பிரஸ் மீட்டில் பேசிக்கொண்டிருந்த ராஜ்நாத் திடீரென மயங்கிவிழ, ராஜ்நாத்தை ஒரு கும்பல் ஆம்புலன்ஸில் கடத்திச் செல்கிறது.

திருப்பத்திற்கு மேல் திருப்பமாக ராஜ்நாத் ஒரு தீவிரவாதி கும்பலிடம் சிக்க, விஞ்ஞானிகள் மாநாடு பிரச்சனைகளின்றி முடிந்ததா..? விவேக்-விஷ்ணு ராஜ்நாத்தை மீட்டனரா..? புவனேஸ்வரி கொலைகார கும்பலிடமிருந்து தப்பித்தாளா..? என்பது போன்ற கேள்விகள் மனதில் வந்து போகும்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #engum_vivek_edhilum_vivek

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=209

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: