விவேக் விஷ்ணு வெற்றி..! – Crime Novel

கண்டிப்புக்கு பேர்போன அந்த லேடிஸ் ஹாஸ்டலுக்கு விவேக் சென்ற போது நேரம் முன்னிரவைத் தாண்டியிருந்தது. வார்டனின் அவசர அழைப்பால் ஹாஸ்டலுக்கு விரைந்துவந்த விவேக் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்றான். மொட்டை மாடியில் தண்ணீர்த் தொட்டிக்கு அருகில் ஒரு இளைஞனின் பிணம் சாய்த்து உட்காரவைக்கப்பட்டிருந்தது.

பிணத்திடம் இருந்து கிடைத்த தபால் ரசீதை தடயமாக வைத்துக்கொண்டு அது சம்பந்தமாக விசாரிக்க சென்ற விஷ்ணுவுக்கு, அதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அடையாளம் தெரியாத அந்தப் பிணத்தை பற்றிய உண்மையோடு வருகிறாள் அவனின்  காதலியான ஜெசிந்தா.

இந்நிலையில் தபால் அனுப்பிய பெண் மர்மமான முறையில் பீச்சில் இறந்துகிடக்க கேஸ் திரும்பவும் ஆரம்ப இடத்துக்கே வந்து நிற்கிறது. கிடைத்த சிறு நம்பிக்கையும் உடைவது போல உணர்ந்தான் விவேக்.

தனக்கு பெண் பார்ப்பதற்காக அப்பா காமேஷ்வரன் குடுத்துச் சென்ற பெண்களின் போட்டோக்களை எரித்த சித்தார்த், நேராக வைஷாலியை சந்திக்க சென்றான். அவளிடம் தன் அப்பாவைப் பற்றிப் புலம்பித்தள்ளிவிட்டு வீட்டிற்கு வந்த அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வைஷாலி யாராலோ கடத்தப்பட்டிருந்தாள்.

ஆறுமாத கர்ப்பிணியான வைஷாலியைத் தன் அப்பாவே கடத்திவைத்து தன்னிடம் ஒன்றும் தெரியாதது போல் நடிப்பதாக நம்புகிறான் சித்தார்த். அவரிடம் சண்டை போட்ட சித்தார்த், திடீரென துப்பாக்கியால் தானே சுட்டுக்கொண்டு இறக்கிறான்.

மருமகளையும் இழந்து இப்போது மகனையும் இழந்து துக்கத்தில் இருக்கும் காமேஷ்வரனுக்கு, ஒருநாள் போன்கால் ஒன்று வருகிறது. அதில் அவரது பேத்தியைப் பற்றிய செய்தி நாம் மேலே பார்த்த லேடிஸ் ஹாஸ்டலில் இருந்து கிடைக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப் பற்றி அறியாத காமேஷ்வரன் அடுத்து செய்தது என்ன..? அந்த லேடிஸ் ஹாஸ்டலில் இறந்து கிடந்த இளைஞனுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு..? வைஷாலி என்னவானாள்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vivek_vishnu_vetri

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=708

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: