தித்திக்கும் தீ..!

பைகாரா அணையைப் பற்றிப் பேட்டி எடுக்கப் போவதாக அணையின் நிர்வாகி சிக்கந்தரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட லட்சணா,  அவரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அணையில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். நீச்சல் தெரியாத சிக்கந்தர் மிகவும் கஷ்டப்பட்டு அவளைக் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கிறான்.

உண்மையில் வந்திருந்த அவள் பிரஸ் ரிப்போர்ட்டர் இல்லை என்பதை அறிந்த சிக்கந்தர் திடுக்கிடுகிறான். சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்து அனாதை விடுதியில் வளர்ந்த லட்சணா தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தை யாரிடமும் தெரிவிக்க மறுத்துவிடுகிறாள்.

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என போலீஸ் ஒரு பக்கம் விசாரணையை மேற்கொள்ள, அதற்கு ஏற்றார்போல் ஒரு இளைஞன் அடிக்கடி அவளை சந்திப்பதாக அனாதை விடுதியில் இருந்த பெண் ஒருத்தி இன்ஸ்பெக்டர் கௌடாவிடம் தெரிவிக்கிறாள்.

இந்நிலையில் எப்படியும் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லிக்கொண்டிருந்த லட்சணாவை சந்திக்க விருப்பப்படுகிறார், புரொபசர் அரிஸ்டோ. நாட்டிற்காக செய்துகொண்டிருக்கும் தன்னுடைய ஆராய்ச்சிக்கு உயிருள்ள மனித உடல் புரொபசருக்குத் தேவைப்பட, யாருக்கும் தெரியாமல் லட்சணாவிடம் அவளது உயிரை உதவியாகக் கேட்கிறார்.

அவரின் சுயரூபத்தை அறிந்திராத அவள், ஆராய்ச்சிக்கு சம்மதிக்கிறாள். இதற்கிடையில் புகழ்பெற்ற புரொபரைக் கொலை செய்வதற்கு அவரது எதிரிகள் காரில் டைனமைட்டை வைக்க அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார் அரிஸ்டோ.

லட்சணாவைப் பற்றிய முக்கியமான ஒரு உண்மையைத் தெரிந்துகொண்ட கௌடா, அரிஸ்டோவிடம் இருந்து அவளைக் காப்பாற்றினாரா..? அரிஸ்டோவின் உண்மையான நோக்கம் என்ன..? அரிஸ்டோவைக் கொலைசெய்ய முயன்றது யார்..?

நாட்டிற்கு நல்லது செய்கிறேன் என்று கூறிக்கொண்டு, அதை சாக்காக வைத்துக்கொண்டு நிழல் காரியங்களில் ஈடுபடுபவர்கள் என்றைக்காவது ஒருநாள் தண்டனை அனுபவிப்பார்கள்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #thithikkum_thee

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=170

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: