கிழக்கே போகும் உயிர்..?! – Crime Novel

அடிபட்டு விழுந்துகிடந்த அந்த இளைஞனின் பெயர் தாஸ் என்று அவன் டயரியை வைத்து டிராபிக் போலீஸ் கண்டுபிடித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த கோகுல்நாத்தும் அவினாஷும் வேறு தடயங்களைத் தேடிக் கொண்டிருக்க, ஒரு துண்டு சீட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கிடைத்தது.

“Life Towards East” என்று அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப் போயினர் போலீஸ். தாஸின் வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு கிடைத்தது, அவன் காதலி சந்தியாவின் அட்ரஸ்.

சந்தியாவைத் தேடிச்சென்ற போலீஸுக்கு அவளின் சடலம் மட்டுமே கிடைக்கிறது. கேஸ் மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நிற்கிறது. இந்நிலையில் சந்தியாவைக் கொலை செய்த நபரைப் பற்றிய விபரம் போலீசாருக்குத் தெரியவருகிறது.

அதேவேளையில் பிசினஸ் சம்பந்தமாக ஃப்ளைட்டில் சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த ஜெயமோகனின் உயிர் சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலேயே பிரிகிறது. தன்னுடைய கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்பட்ட சாரதா டிடெக்டிவ் உதவியை நாடுகிறாள்.

இங்கிருந்து டிடெக்டிவ் நரேன்-கவிதா கதைக்குள் என்டர் ஆகிறார்கள். சிங்கப்பூரில் இருந்து தான் தவறு ஆரம்பிக்கிறது என யூகித்த இருவரும் ஃப்ளைட் ஏற, பிசினஸ்மேன் சேஷாத்ரியை ஃப்ளைட்டில் சந்திக்கிறார்கள். அவர் மூலமாக வேறு சில உண்மைகளைத் தெரிந்து கொண்ட நரேன் நிகழ்ந்தது இயற்கையான மரணம் அல்ல என்ற முடிவுக்கு வருகிறான்.

கதையில் திருப்புனையாக அமைவது சேஷாத்ரியின் மரணம். அவரும் ஜெயமோகனைப் போல இயற்கையான முறையில் இறந்திருப்பதே. மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றினாலும் ஒரு நூலிழை போல உள்ள தொடர்பு என்ன..? போலீஸ் கண்டுபிடிப்பதற்கு முன் நரேன்-கவிதா குற்றவாளிப் பிடித்தனரா..? மேலும் கொலைகள் நடக்கும் முன் தடுக்கப்படுமா..? அடுத்தடுத்து பிசினஸ்மேன்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #kizhakke_pogum_uyir

want to buy :

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: