ஒவ்வொரு நாவல்களும் (அ) கதைகளும் வாசிப்பவர்களை கனவுலகுக்கு அழைத்துச் செல்லும். அவற்றில் சில எதார்த்தமாகவும், சில அசாத்தியமாகவும், சில சிந்திக்கவும் வைக்கும். இதன் வரிசையில் வெகுசில கதைகளே நம்மை திகிலூட்டும்.
அதுபோன்ற ஒரு கதைத் தொகுப்பே “ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்”. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். மொத்தம் 11 கதைகள். எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு சாமானிய விஷயமே உங்களை அச்சுறுத்தும், புதிர் போடும், திகிலாக்கும். உதாரணத்திற்கு ஒரு துண்டு பேப்பர், இரண்டு கதவுகள், சிறு கடல் பறவைகள், ஒரு மேஜை, ஒரு படுக்கை அறை, ஜன்னல் பிம்பங்கள்..
இதுபோல ஒவ்வொன்றிலும் ஒன்று. உச்சபட்சமாக கதையை வாசிக்கும் நீங்கள், ஒரு மர்மக் கதைகள் ஆர்வலராக இருந்தால், இந்தப் புத்தகம் ஒரு நல்ல தேர்வாக அமையும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் உங்களை அடுத்த கதையை நோக்கிச் செலுத்தும்.
பின்குறிப்பாக, வழக்கமான மர்மக்கதைகளில் இருப்பது போன்று பிணங்கள், மர்மக் கொலைகள், ரத்தம், கொடூர எண்ணம் கொண்ட கதாப்பாத்திரங்கள் உங்களை திகிலூட்டுவதற்காக இந்தப் புத்தகத்தில் பெரும்பாலும் எங்கும் பயன்படுத்தப்பட்டிருக்காது.
கதைகளைப் படிப்பதற்கு முன்பு சற்று தயாராகிக்கொள்ளுங்கள்..இதோ 11 கதைகளின் தலைப்பு உங்களுக்காக..
1] பறவைகள்
2] நீல பேப்பர்
3] புயல்
4] கிருகப் பிரவேசம்
5] கொலைக்கு ஒரு காரணம்
6] முன்னோரை நம்பாதே
7] ஒலித்த நீதி
8] பைப் ஸ்மோக்கர்
9] மேஜையின் அருகில் ஒரு பிணம்
10] பெண்ணா, புலியா?
11] உச்சகட்ட உலகம்
இதில் என்னுடைய தேர்வு.. உச்சகட்ட உலகம், பெண்ணா, புலியா?, நீல பேப்பர்.
உங்களுக்குப் பிடித்ததை கமெண்ட் செய்யுங்கள்..
முன் குறிப்பு :-
இப்புத்தகத்தை வாசிப்பதற்கு முன் அதன் பதிப்புரையையும், மொழிபெயர்ப்பாளர் உரையையும் படிப்பது சிறப்பான அனுபவத்தைத் தரும்.
இக்கதை தமிழில் பெரு.முருகன் எனும் எழுத்தாளரால் மொழிபெயர்க்கப்பட்டு விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.
#one_minute_one_book #tamil #book #review #vikatan_publishers #mystery_novel #alfred_hitchcock #peru.murugan #marma_kadhaigal
want to buy : https://www.amazon.in/Alfred-Hitchcock-Marma-Kathaigal-Tamil-ebook/dp/B072JYYBYH
Leave a Reply