தன்னுடைய மனைவி நளினியின் நடத்தையில் சந்தேகப்படும் கெளதம், அவளைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓடும் ரயிலில் சிங் வேஷம் போட்டு நளினியைத் தீர்த்துக்கட்டிவிட்டு தற்கொலை போல சித்தரிக்கத் திட்டம் தீட்டுகிறான்.
இன்னொரு பக்கம் மந்திரி பதவி பறிபோகக் காரணமாகக் காரணமாக இருந்த ரிப்போர்ட்டர் நீரஜாவைத் தீர்த்துக்கட்ட காத்திருந்த கோதண்டத்திற்கு, தணல் தங்கராஜ் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுக்கிறான். அதன்படி ஒத்தக்கால் தாமஸ் என்ற ரவுடியை வைத்து ரயிலில் நீரஜாவின் உயிரைப் பறிப்பதாகத் திட்டம்.
கொலைத்திட்டங்களுக்கு நடுவில் யாரும் எதிர்பாராத வகையில், விவேக் அவன் மனைவி ரூபலாவுடன் கேஸ் சம்பந்தமாக அதே ரயிலில் பயணிக்க வேண்டிய சூழல் உருவானது. வேலைகளுக்கு நடுவே குறுஞ்செய்தியாக, கிராஸ்டாக்கில் ஒரு பெண்ணை ரயிலில் கொலைசெய்யப் போவதாக இருவர் பேசிக்கொண்டதைப் பயணி ஒருவர் விவேக்கிடம் வந்து சொல்ல, உஷாரான விவேக் வேகமாக இயங்குகிறான்.
ஆனால், நடந்த சம்பவமோ வேறுவிதமாக இருந்தது. கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தை, ரயில் தண்டவாளத்தைச் செக் செய்யப் போன பணியாள் ஒருவன் பார்த்துக் கலவரமடைகிறான். உடனே அவன் ரயில்வே போலீசிற்குத் தகவல் கொடுக்க, அந்த தகவல் விவேக் காதிற்கு எட்டுகிறது. மேற்கொண்டு விவேக் செய்தது என்ன..? தலை வெட்டப்பட்ட நிலையில் கிடைத்த அந்த உடல் யாருடையது..? எதிர்பார்த்தது ஒன்று ஆனால் நிகழ்ந்ததோ வேறு என வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருக்கும் நாவல்.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #virainthu_vaa_vivek
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=681
Leave a Reply