உதடுகள் சுடும்..?!

மும்பையில் உள்ள தனது ஆட்டோ காரேஜை நிழல் காரியங்களுக்கு பயன்படுத்தி வந்த நகுல் லட்சாதிபதியாவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. குபேர் என்ற பணக்காரரிடம் உள்ள புகைபிடிக்கும் பைப்பில் கோடிக்கணக்கான மதிப்புள்ள டிவைன் வைரங்கள் இருப்பதாகவும், அதை எடுத்துக் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க ஆள் தயாராக இருப்பதாகவும் நண்பன் சாம்பமூர்த்தி சொல்ல, களத்தில் இறங்குகிறான் நகுல்.

ஐந்து லட்சத்திற்கு விலை போகக்கூடிய பழங்கால புகைக்கும் பைப் குபேரிடம் இருப்பதாகக்கூறி அதை எடுத்துத் தருமாறு, அவரது வீட்டில் நர்ஸாக வேலை பார்க்கும் தன்னுடைய காதலி கல்பகாவிடம் பொய்யுரைக்கிறான் நகுல். முதலில் மறுத்த அவள் பின்பு அதை எடுத்துத் தருவதற்கு ஒப்புக்கொள்கிறாள்.

பக்காவாக ஒரு திட்டம் போட்டு, குபேருக்கு கொடுக்கும் ஜூஸில் தூக்க மாத்திரையைக் கலந்துகொடுக்க சொல்கிறான் நகுல். அவ்வாறே அவள் அந்த வைரங்கள் உள்ள பைப்பை எடுத்து நகுலிடம் கொடுக்கிறாள் கல்பகா.

வைரம் காணாமல் போன விஷயம் போலீசிற்கு போக, கல்பகா உள்பட வீட்டில் உள்ள அனைவரையும் போலீஸ் கேள்விகளால் துளைத்தெடுத்துவிடுகிறது. உண்மை தெரிந்த கல்பகா, நகுலிடம் சண்டை போட, அவளைக் கழுத்தை நெரித்து கொலை செய்கிறான் நகுல்.

ஏர்போர்ட்டில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், வைரங்களைக் கடத்த திட்டம் போட்டுக்கொண்டிருந்த நகுலுக்கு அவன் நண்பன் வின்சென்ட் நினைவிற்கு வந்தான். அமிலம் குடிப்பது, சிறு சிறு கண்ணாடித் துண்டுகளை அப்படியே விழுங்குவது போன்ற மேஜிக் ஷோக்களை நடத்தி வந்த தனது நண்பன் வின்சென்ட்டையும் அவன் மனைவி லீனாவையும் தனது திட்டத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறான் நகுல்.

திட்டப்படி நால்வரும் ஏர்போர்ட் செல்ல, எதிர்பாராத விதமாக லீனாவின் தொண்டைக்குள் அந்த வைரங்கள் சிக்கி அடைக்க, மயக்க நிலைக்கு செல்கிறாள் லீனா. இந்நிலையில் கல்பகாவின் மரணத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு போலீஸ் அடுத்த அடியை எடுத்துவைக்க, குற்றவாளிகள் பிடிபட்டனரா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #udhadugal_sudum

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=415

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: