புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான கிருபாவின் அப்பாவிற்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட, ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்கள். கிருபாவின் ரசிகை என சொல்லிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கே போன் வர, பெண் குரலில் பேசிய ஒருவன் கிருபாவிடம் தவறான நோக்கத்துடன் பேசுகிறான்.
இந்த விசயத்தைக் கிருபா தன் அம்மா வசுந்தராவிடம் கூற, கிருபாவின் அம்மாவிற்கும் அதேபோல் அழைப்பு வர, உதவி போலீஸ் கமிஷனரிடம் விசயத்தைக் கொண்டுபோகிறாள் வசுந்தரா. மேற்கொண்டு தான் பார்த்துக்கொள்வதாக போலீஸ் சொல்லி செல்ல, ஒருநாள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான் போனில் பேசிய அற்புதராஜ் என்பவன்.
கிருபாவின் நீலப்படங்களை வசுந்தராவிற்குப் போட்டுக் காட்டிய அவன், அவளிடம் அந்த கேசட்டிற்கு எட்டு லட்சம் பேரம் பேசுகிறான். இந்த உண்மை கிருபாவை எட்டுகிறது. கோபத்தின் உச்சிக்கே சென்ற கிருபா அந்த கேசட்டில் தான் இருப்பதை மறுத்து துப்பாக்கியை எடுக்கிறாள்.
அதேநேரம் மாஜி கணவனின் தீய பழக்கங்களால் அவனைவிட்டு விலகிய பிரமிளா, அவளைப் பற்றிப் புரிந்துகொண்ட ராம்சேகரை இரண்டாவதாகத் திருமணம் செய்கிறாள். பிரமிளாவை பெங்களூரில் உள்ள அவன் அத்தை-மாமா வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறான் ராம்சேகர். இருவரும் ஒருநாள் பார்க் சென்றபோது ராம்சேகர் ஐஸ்க்ரீம் வாங்க செல்ல, அங்கு வந்த இளம்பெண்கள் பிரமிளாவிடம் ஆட்டோகிராப் கேட்க அவள் திகைத்தாள்.
உண்மையில் பிரமிளாவைக் கிருபா என்று நினைத்து தவறாகக் கேட்டுவிட்டதாக அவர்கள் சென்ற பிறகும் பிரமிளா குழப்பத்திலேயே இருந்தாள். பெங்களூர் வந்த இரண்டாம் நாளிலிருந்து அவள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
மறுநாள் காலை லேட்டாக எழுந்த பிரமிளா, அவளது ரூமில் இருந்த ராம்சேகரின் மாமா உபயோகிக்கும் சிகரெட்டுத் துண்டுகளைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அதைப் பற்றி அவள் ராமிடம் கேட்க, அவன் ஏதேதோ சொல்லி மழுப்பினான். பயந்த அவள் அந்த வீட்டை விட்டு வெளியேற முற்பட அனைவரின் சுயரூபமும் அவளுக்குத் தெரியவருகிறது. இதற்கிடையில் மாடிப்படிகளில் விழுந்த பிரமிளா தன் சுயநினைவை இழக்கிறாள். பிரமிளாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள உடனே வாசியுங்கள் நீல நிற நிமிஷங்கள்..
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #neela_nira_nimishangal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=363
Leave a Reply