- வானியல் விஞ்ஞானி டைகோ பிராஹே இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- இந்த நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன்.
- இந்த நாட்டின் தேசிய விளையாட்டு கால்பந்து.
- ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்று.
- உலகின் அமைதியான நாடுகளில் ஒன்று.
- குழந்தைகலுக்குப் பிடித்த பிளாஸ்டிக் துண்டுகளை சேர்க்கும் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கும் லீகோ நிறுவனம் இந்த நாட்டில் தான் உள்ளது.
- தேவதைக் கதைகளின் தந்தை எனப் போற்றப்படும் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- நீண்ட காலமாக மன்னராட்சி தொடரும் நாடு இது.
- ஸ்வீடனுக்கு தென்மேற்காகவும் நார்வேவிற்கு தெற்காகவும் அமைந்துள்ள நாடு இது.
- இந்த நாட்டில் உள்ள 407 தீவுகளில் 70 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள்.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply