நான்கு வருட சிறைத்தண்டனை முடிந்த ரதீஷ், தன்னுடைய காதலி சூர்யாவை சந்திக்க அவள் வீட்டிற்கு வருகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சூர்யாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜனுடன் திருமணம் முடிந்திருந்தது. திருமணமான விசயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்த ரதீஷின் கையில் இருந்தது சூர்யா கொடுத்திருந்த லவ் லெட்டர்.
சூழ்நிலை காரணமாக சூர்யாவிற்காக சிறைக்கு சென்ற ரதீஷ், தன்னை அவள் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால், அந்த லெட்டரை வைத்து சூர்யாவிடம் பணம்கேட்டு அவளை ப்ளாக்மெயில் செய்கிறான்.
தன் கணவர் ராஜனுக்குத் தெரியாமல், ரதீஷிற்குப் பணத்தைக் கொடுக்க வீட்டிற்கு அழைக்கிறாள் சூர்யா. இதற்கிடையில் குடித்திருந்த ரதீஷ் சூர்யாவைத் தப்பான பார்வை பார்க்க, அவனிடமிருந்து தப்பிக்க அவனைத் தலையில் அடிக்கிறாள். தற்காப்பு கொலையாக மாறுகிறது. வேறுவழியில்லாத சூர்யா ரதீஷின் பிணத்தை மறைக்க முடிவு செய்கிறாள்.
அன்றிரவே சூர்யாவின் அண்ணன் அரவிந்த் தங்கையைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறான். பிணத்தை ஸ்டோர்ரூமில் வைத்துக்கொண்டு, மனதில் பயத்தை மறைத்துக்கொண்டு இருந்த சூர்யா அந்த பிணத்தை எப்படி டிஸ்போஸ் செய்தாள்..? சீமந்ததிற்காக உறவினர்கள் வந்த வண்ணம் இருக்க, அடுத்து நடந்தது என்ன..? ராஜன் கொலையைக் கண்டுபிடித்தானா..? பரபரப்பான கதை நகர்தலில் திடுக்கிடும் திருப்பத்துடன் அதே இரவு..
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #adhe_iravu
want to buy :
Leave a Reply