அன்று மாலை ரம்யாவைப் பெண் பார்க்க செல்ல இருந்தான் ரகுநாதன். ஆனால், தன்னுடைய மோசமான பழக்கவழக்கங்களைப் பற்றி அட்சரசுத்தமாக புட்டுப்புட்டு வைத்துவிட்டு சென்ற ரம்யாவை நினைத்து அந்த நிமிடம் மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்தான் ரகு. அவளைப் பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தான்.
அதே நேரம் தனக்கு வரும் வரன்களைக் காரணம் சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டிருந்த அந்த ரம்யா, பிரபாகரிடம் சற்று பயத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். பிரபாகரும் ரம்யாவும் காதலர்கள். வரன்களின் உண்மையான சுயரூபத்தை அவர்களிடமே சொல்லி விலக வைப்பது அவர்களின் திட்டம்.
இந்தமுறை தட்டிக்கழித்த ரகுநாதனைப் பற்றி வெளியே விசாரித்திருந்த ரம்யா பயத்துடன் பிரபாகரிடம் பேசிக்கொண்டிருந்தாள். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பிரபாகர் அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஆனால், ரகுநாதனோ அவளைப் பழிவாங்க கெமிக்கல் லேப்பில் வேலை செய்யும் தன்னுடைய நண்பன் மோகனிடம் உதவி கேட்டான். சமயம் பார்த்து அந்த கெமிக்கலை ரம்யாவின் முகத்தில் வீசி அவளைப் பழிதீர்க்க நினைத்தான்.
ரகுவின் திட்டப்படியே கெமிக்கல் கைக்கு வந்த அடுத்த நாளே, திட்டத்தைத் தொடங்கி ரம்யாவின் முகத்தில் அந்த கெமிக்கலை அவன் வீச, அவளது முகமே கோரமானது. இந்த கோர சம்பவத்துக்கு காரணமான ஆளை போலீஸ் மும்முரமாகத் தேடிக்கொண்டிருக்க, ரகுவின் மேல் சந்தேகப்பட்ட பிரபாகர் அவன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்கிறான்.
பிரபாகரை அடித்துத் துரத்திய ரகுநாதன், சிம்லாவில் உள்ள பணக்கார சம்பந்தம் கிடைக்க கல்யாணத்திற்குத் தயாராகிறான். இதற்கிடையில், கதையில் திடீர் திருப்பமாக ரகுவின் உண்மையான சுயரூபம் பெண் வீட்டாருக்குத் தெரியவர ரகுவின் நிலை..?!
ரம்யாவில் ஆரம்பித்த ரகுவின் திருவிளையாடல் சிம்லாவில் முடிவதே, சிம்லா ரம்யா.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #simla_ramya
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1150
Leave a Reply