உலகம் உன் வசம்..!

COMMUNICATION..

உங்களால கொஞ்ச நேரத்துக்கு யாருகிட்டயும் பேசாம அமைதியா இருக்க முடியுமா..? கண்டிப்பா முடியாது.

பேச்சு… இது இல்லாம நிறைய பேரால இருக்கவே முடியாது. என்னால சாப்பிடாம கூட இருக்க முடியும். ஆனா, பேசாம சத்தியமா இருக்க முடியாதுன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீங்க.

இப்போ நாம பாக்க போறது வெறும் பேச்சைப் பத்தி மட்டும் இல்லன்னு சொல்லிக்கறேன். COMMUNICATION அப்படின்னா பேசறது மட்டும் தான்னு நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அது உண்மை இல்ல.

நமக்கெல்லாம் முன்னோடினு சொல்லப்படற, காடுகளில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் கிட்ட கூட இந்த COMMUNICATION இருந்திருக்கு. பேச்சு மட்டும் இல்லைங்க எழுத்து, சைகை இதுவும் COMMUNICATION தான். அதாவது தகவல் தொடர்பு தான்.

ஒரு தகவலை நாம மத்தவங்க கிட்ட எப்படி சொல்ல நினைக்கிறோமோ, அது அப்படியே எதிர்ல இருக்கவங்க கிட்ட சரியா பிரதிபலிக்குதா..? இல்லன்னு தான் நிறைய எடத்துல பதில் கிடைக்கும். உறவுகளுக்கிடையே வர்ற சண்டைகள், வேலை செய்யற இடத்துல வர்ற பிரச்சனைகள் இப்படி நிறைய பிரச்சனைகளுக்கு காரணம் சரியான தகவல் தொடர்பின்மையே.

COMMUNICATION எப்படிலாம் இருந்தா நாம ஜெயிக்க முடியும், எப்படி இருக்கக் கூடாது, பிரச்சினைனு ஒண்ணு வந்தா அத எப்படி ஹேண்டில் பண்ணனும், எப்படி ஹேண்டில் பண்ணக் கூடாதுனு தெளிவான உதாரணங்களோடும் செயல்முறைகளோடும் சொல்லப்பட்டிருக்கு இந்தப் புத்தகம்.

தகவல் தொடர்போட முக்கியத்துவத்தை நிறைய ஆராய்ச்சிகள் மூலமா இந்தப் புத்தகத்தின் வழியா நிரூபிச்சிருக்கிறாரு ஆசிரியர் சோம.வள்ளியப்பன் அவர்கள். இதேபோல எழுத்துக்கள் உருவான விதத்தையும் மிகத் தெளிவா விளக்கியிருப்பது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு.

இந்தப் புத்தகத்தைப் படிச்சு முடிச்சதுக்கு அப்புறமா, COMMUNICATION-ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? என ஆச்சரியப்படும் அளவிற்குப் புத்தகத்தைப் பற்றிய புரிதல் நமக்கு இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

#one_minute_one_book #tamil #book #review #communication #soma_valliappan #ulagam_un_vasam

want to buy : https://www.amazon.in/Ulagam-Vasam-Soma-Valliappan/dp/8183681999/ref=tmm_pap_swatch_0?_encoding=UTF8&qid=&sr=

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: