சர்வைவா

கற்பனைகள்…

பெரிய உருண்டையான இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களிலும்

மனிதனை மட்டும் தனித்துக் காட்டும் ஒரு சமாச்சாரம்தான் கற்பனைகளும், கனவுகளும். இங்கு நடக்கும் அத்தனைக்கும் விதை போட்டது இதுதான்.

who knows…?!

நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஏதோ ஒரு ஆதி மனிதன் கனவாக கூட பார்த்திருக்கலாம். இன்னும் விளக்கமாக சொன்னால், ஏதோ ‘ஒரு’ மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருப்பினைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால் அதை எப்படி கையாளுவதென வேறு வேறு மனிதர்கள் தங்களது மூளைகளில் ‘simulation’ செய்து கற்றுக்கொண்டு இருப்பார்கள். அதன் செயல்பாடுகளைக் குறித்து கனவுகண்டிருப்பார்கள். அதையும் முயன்றிருப்பார்கள்.

இந்த முறைகளின் வழியேதான் மனிதன் வேட்டையாடினான்; உடையணிந்து கொண்டான்; இரும்பைப் பயன்படுத்தினான்; கூட்டமாகப் பிரிந்தான்; வீடு கட்டினான்; எல்லைகள் வகுத்தான்; சண்டை செய்தான்; ஆயுதங்கள் புரிந்தான்; தொலைதூர தகவல்தொடர்பு கொண்டான்; கணினி படைத்தான்; விண்வெளி சென்றான்…etc…

இதெற்கெல்லாம் அவனே ‘Technology’ என்று பெயர் வைத்துக்கொண்டான். இயற்கை அளித்த எண்ணற்ற மரங்களை விட்டுவிட்டு, ‘Technology’ ஐ வளர்க்க கூட்டம்கூட்டமாக மனிதர்கள் ‘Scientist’ என்று செட்டு சேர்ந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பு: இங்கிருந்து ‘Technology’ alias தொழில்நுட்பம்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது எதற்கு சரிவருகிறதோ இல்லையோ இந்த தொழில்நுட்பத்திற்கு தினம்தினம் நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே தின்று அனுதினமும் புதுரூபம் எடுக்கும் இந்த தொழில்நுட்ப கூட்டுப்புழுவின் பட்டாம்பூச்சி வடிவம் என்னவாக இருக்கும்..?

இங்கிருந்து பட்டாம்பூச்சி alias செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence)

சர்வைவா.. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் இன்று…நேற்று…நாளை… இதுதான் ஒன்லைன்.

சில பெயர்களை உங்களுக்கு நான் அறிமுகம் செய்கிறேன். அதில் எத்தனை உங்களுக்குத் தெரியும் என்ற எண்ணிக்கையை comment – ல் பதிவு செய்யுங்கள்.

இங்கிருந்து செயற்கை நுண்ணறிவு alias AI.

“Alpha Go, Lynx Insight, DeepDream, AttnGAN, Folk-Rnn, Watson, Benjamin, Sophia, Siri, Alexa, Google Assistant” இது அனைத்தும் AI – களின் பெயர்கள். இதில் சில நமக்குத் தெரிந்திராத, நம்மை விட வேகமாக update ஆகிக்கொண்டிருக்கும் AI-கள்.

AI – யின் வளர்ச்சி, அதன் செயல்திறன்கள் பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள், நன்மை – தீமைகள் மற்றும் AI ஏற்படுத்தப்போகும் பல விளைவுகளையும், அந்த விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகளையும் பற்றிய ஒரு ஊடுபார்வையே இந்தப் புத்தகம். ஆனந்த விகடனில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ‘அதிஷா’-வின் முதல் புத்தகம் என்பது கூடுதல் சிறப்பு.

சும்மா இல்ல ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்- உம், எலான் மஸ்க்கும் கண்டு அஞ்சுகிற விஷயம் இந்த AI-க்கள். இதைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியமான உடனடித் தேவை. மனிதன் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த Human Race-ல் சிலர் வம்படியாக இந்த AI-ஆசாமிகளை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சர்வைவா, அதிஷாவின் வெறித்தனமான படைப்பு என்று கூட கூறலாம் அல்லது நம் கண்ணுக்கு எட்டாத சில விஷயங்களைக் நமக்கு காட்டும் முயற்சி என்றும் கூறலாம். எது எப்படியோ இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிச்சதுல இருந்து, செயற்கை நுண்ணறிவு பத்தி புரிஞ்சுக்க பல உபயோகமான திரைப்படங்களோட Reference கிடைச்சது.

படிச்சு முடிச்சதும் என்னோட mind voice  இதான்..

“டேய் சயின்டிஸ்ட்டுகளா என்னடா பண்ணிவெச்சிருக்கீங்க..?!!”

Jokes Apart…

பல நூற்றாண்டுகளாக மனிதன் தனது தடைகளை தொழில்நுட்பங்களின் உதவியுடன் தகர்த்து முன்னேறிக்கொண்டு இருக்கிறான். இப்போது தொழில்நுட்பம் நமக்கு எதிராக twist அடித்து நம்மை போட்டிக்கு அழைக்கப் போகிறதோ?… பாண்டவர்கள் பாஞ்சாலியை வைத்துத் தோற்றது போல நாமும் இந்த AI-க்களிடம் தோற்று நம் வாழ்க்கையை அதனிடம் தரப்போகிறோமா? அல்லது தந்துகொண்டு இருக்கிறோமோ?  கால ஓட்டத்தில் பல அசாதாரணங்களைக் கடந்து தப்பிப் பிழைத்தது இந்த AI-க்களுடன் தோற்கத்தானோ?  முன்பெல்லாம் உயிர் பிழைக்கத் தேவை உடல்வலிமை, புலன்களின் துல்லியம் என்று கூறிக்கொண்டிருந்த காலம், இப்போது நம் முன் புதிய விதிகளையும் சவால்களையும் வைத்து…”பிழைத்துக்கொள் சர்வைவா..!” என்கிறதோ?…எனில், ஜெயிக்கப்போவது யார்..?

#one_minute_one_book #tamil #book #review #vikatan_publishers #surviva #artificial_intelligence #athisha #non_fictional

One thought on “சர்வைவா

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: