இன்னொரு அத்தியாயம் – Crime Novel

போனில் வந்த செய்தியைக் கேட்டதிலிருந்து நொறுங்கிப் போயிருந்தாள் சாந்தா. இதோடு இரண்டாவது முறையாக அவளுடைய அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வர அயர்ந்து போனாள். கணவனின் ஆபிசிற்கு போன் செய்து தகவலைத் தெரிவித்துவிட்டு, அவளுடைய ஆபிசில் லீவ் சொல்லிவிட்டு உடனே மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.

ஹாஸ்பிடலில் அவளுக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருந்தது. தன்னுடைய தந்தைக்கு உடனே பைபாஸ் சர்ஜரி செய்ய லட்ச ரூபாய் செலவாகும் என டாக்டர் சொல்ல இடிந்து போனாள் சாந்தா.

மாலையில் சாவதானமாக மாமனாரைப் பார்க்க வந்த கணவன் மேல் அவளுக்கு கோவமாக வந்தது. அதற்கு மேல் அவளுடைய மாமியாரின் பேச்சு இருந்தது. லட்ச ரூபாய் செலவழிக்க மனம் இல்லாத கணவன் மற்றும் மாமியாரிடம் சண்டை போட்டு, அப்பா இருந்த வீட்டை விற்று அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவெடுக்கிறாள்.

பெற்றெடுத்த தந்தைக்கு கூட சொந்த காசில் செலவு செய்ய முடியாமல் தவித்த சாந்தாவின் வாழ்வைக் காப்பாற்ற அவளுடைய அப்பா தவறான முடிவெடுக்கிறார். இந்நிலையில் திடீரென மருந்தைக் குடித்து அவள் தந்தை உயிரிழக்க, தனக்கென்று இருந்த உறவையும் இழக்கிறாள் சாந்தா.

இங்கிருந்து இன்னொரு அத்தியாயத்திற்கு தாவுங்கள்..!

கல்கத்தாவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே லட்சுமிக்கு மோசமான நாளாக அமைகிறது. வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் மனித மிருகங்களிடம் இருந்து தன்னைக் காப்பற்றிக் கொள்ள போராட வேண்டி இருக்கலாம் என்றெண்ணி எரிச்சல் அடைந்தாள் அவள்.

இங்கு தான் லட்சுமி அரவிந்தனைப் பார்க்கிறாள். சொகுசான வாழ்விற்கு ஆசைப்பட்ட அரவிந்தனின் மனைவி அவனை விட்டு விலக, மாற்றுத்திறனாளியான மகள் ஜான்சியை அவன் பாசத்தோடு வளர்த்து வருகிறான்.

திடீரென ஒருநாள் அரவிந்தன் நோயில் விழ, ஆபிசிற்கு லீவு போட்டுவிட்டு அவனை அன்புடன் கவனித்துக் கொள்கிறாள் லட்சுமி. இதற்கிடையில் அவளுடைய மேலதிகாரி ஹாஸ்பிடலுக்கு வந்து அவளுடைய பிளாஷ்பேக்கைக் கூறி அவளை மிரட்டுகிறான்.

நான்கு மேலதிகாரிகளுடன் இணங்கி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி நடந்துகொள்ள நிர்பந்திக்க, வேலையை உதறித் தள்ளுகிறாள் லட்சுமி. பிரச்சனை முடிந்தது என்று நினைத்த வேளையில் அரவிந்தனுக்கு ப்ளட் கேன்சர் இருப்பது தெரிய வர அதிர்ந்து போன அவள் வாழ்வில் காத்திருக்கும் சம்பவங்கள் என்ன என்பதே இன்னொரு அத்தியாயம்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #innoru_atthiyaayam

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=338

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: