ஊசி முனையில் உஷா..!

இந்த முறை ஆபிசிற்கே வந்து காதலை சொன்ன விஜயகுமாரை எரித்து விடுவது போல் உஷ்ணமாகப் பார்த்தாள் உஷா. ஆனால், அவன் விடுவதாக இல்லை. திடீர் விஜயமாக அன்று மாலையே குடும்பத்துடன் உஷாவைப் பெண் பார்க்க வீட்டிற்கே வந்துவிட்ட விஜயகுமாருக்கு ஒரு அதிர்ச்சி.

திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென ஒரு விபத்தில் உயிரிழந்த காதலன் குணாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக எண்ணி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வறுமையில் இருந்த குணாவின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள் உஷா.

உஷா நினைவாகவே இருந்த விஜயகுமார், மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்கிறான். இந்நிலையில் பம்பாயில் உள்ள உஷாவின் சிநேகிதி மேகாவின் உதவியால் ஒரு பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் உஷாவிற்கு வேலை கிடைக்கிறது. அவளின் சந்தோசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டெலிபோனில் மர்ம நபரால் உஷாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடப்படுகிறது.

பம்பாய் வந்து சேர்ந்த உடனே இரண்டாவது முறையாக உஷாவை ஒருவன் போனில் எச்சரிக்க, எரிச்சலான அவள் அவனை நேரில் வந்து நிரூபிக்கும்படி கூற, ஒத்துக்கொண்ட அவன் கடைசி வரை வரவே இல்லை.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அவளுக்கு ஒரு சந்தோஷம் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. வேலை ஆபிசில் அல்ல, கம்பெனி முதலாளியான லக்ஷ்மிகாந்தனின் வீட்டில்.

அங்கு வந்த சேர்ந்த முதல் நாள் இரவே ஒரு பெண்ணின் அழுகுரல் அவளை நடுக்கியது. அடுத்தடுத்த நாட்களும் வித்தியாசமாக குழப்பத்துடன் நகர, கடைசியாக லக்ஷ்மிகாந்தனிடமே நேரடியாக கேட்டே விட்டாள்.

அதற்கு லக்ஷ்மிகாந்தன் தன் குடும்ப சூழ்நிலையை உஷாவிற்கு விளக்குகிறான். குழப்பம் நீங்கிய உஷா முதலில் அதிர்ந்து, பின் சுதாரித்து அவர்களுக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டாள். ஆனால், எதிர்பாரதாக விதமாக உஷாவின் தோழி மேகா கொலை செய்யப்படுகிறாள்.

கதையில் திருப்பமாக இறந்து விட்டதாக அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த உஷாவின் காதலன் குணா திரும்பி வர, ஊசி முனையில் இருக்கும் உஷாவின் நிலை என்ன..? உஷா அவளுடைய வாக்கை காப்பாற்றினாளா..? மேகாவைக் கொலை செய்தது யார்..? உஷாவைக் கொல்லத் துடிப்பவர்களின் நோக்கம் என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #oosi_munaiyil_usha

want to buy :

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: