வெற்றி என்றால் விவேக்.!

மைக்ரோ பயலாஜிகல் ரிசர்ச் ஸ்காலரான ஸ்வப்னா காணாமல் போய் ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அன்றைய தினம் அவளுடைய பிணத்தைப் போலீசார் கைப்பற்றியிருந்தனர். ஸ்வப்னா கடைசியாக விவேக்கிற்கு எழுதிய முற்றுப்பெறாத அந்தக் கடிதம் போலீசிற்கு தடயமாகக் கிடைக்கிறது.

அதில் அவள் “இந்த லெட்டருடன் நான் அனுப்பியுள்ள ஆ..” என்று ஆரம்பிப்பதற்குள் அவள் எழுதியிருப்பது தடைப்பட்டிருந்தது. இதன் மூலம் அவள் லெட்டருடன் வேறு எதையோ சேர்த்து அனுப்ப திட்டமிட்டிருப்பதை உணர்ந்த விவேக், விஷ்ணுவிடம் அந்த விசாரணையை மேற்கொள்ள சொல்லிவிட்டு ஸ்வப்னாவின் அண்ணன் சுபாகரை விசாரிக்க செல்கிறான்.

ஸ்வப்னா வேலை பார்த்த ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் விசாரிக்கச் சென்ற விவேக்கிற்கு ஸ்வப்னாவின் தோழி புனிதவதி மூலமாக ஸ்வப்னா ஒரு கால் கேர்ள் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வருகிறது. மேலும் அவளை விசாரித்ததில் ரிஷிமைந்தன் என்ற நபரைப் பற்றிய தகவல்கள் விவேக்கிற்கு கிடைக்க அடுத்த மூவ்வை விவேக் எடுத்து வைக்கிறான்.

அடுத்த அத்தியாயம்..

காலைநேர வாக்கிங்கை முடித்து விட்டு ஈஸ்வருடன் (கணவனாகப் போகிறவன்) கோபமாகப் பேசிக்கொண்டிருந்த நித்யா, திடீரென கடைவாயில் இருந்து ரத்தம் வழிய ஒரு பக்கமாக சரிந்து விழுகிறாள். ஹாஸ்பிடலில் ஒரு திடுக்கிடும் செய்தி நித்யாவின் குடும்பத்திற்கு காத்திருந்தது.

கிளாஸ்டீரியா என்ற ரேர் பாக்டீரியா நோயினால் நித்யா பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை குணப்படுத்த கோடிகளில் பணம் செலவாகும் என்பதையும் டாக்டர் விளக்க கலக்கமடைகிறார் நித்யாவின் அப்பா. முக்கியமாக கிளாஸ்டீரியா நோய் குணமாகும் வாய்ப்பு சதவிகிதமும் குறைவு என்பதை அறிந்த அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

லண்டனில் உள்ள ஆர்தர் ஹெட்டிக்கின் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட நித்யா, அவளுக்கான சிகிச்சை முறைகள் மறைமுகமாக நடக்கிறது. மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சையை ஆரம்பிக்கும் முன், நித்யா அந்த ஹாஸ்பிடலின் சுயரூபத்தை வெளியே கொண்டு வருகிறாள்.

உண்மையைக் கண்டுபிடிக்க நித்யாவும் அவள் குடும்பமும் நடத்திய நாடகம் லண்டனில் வெளிப்பட, இந்தியாவில் இதற்கு உடந்தையாக இருந்தவர்களின் நிலை என்ன..?

மைக்ரோ பயாலாஜி லேபில் மட்டுமே உருவாக்க முடிந்த கிளாஸ்டீரியா பாக்டீரியாக்களுக்கும் லண்டனில் உள்ள ஆர்தர் ஹெட்டிகின் மருத்துவமனைக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்த விவேக்கிற்கு என்றுமே வெற்றி தான்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vetri_endral_vivek

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=191

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: