அந்த அதிகாலை வேளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாவின் வீட்டுக்கு வர, அவளுடைய அப்பா சத்தியமூர்த்தி சற்று திகைத்துப் போனார். பின் சுதாரித்த அவர், அருணாவை அழைத்து வந்தார்.
கைனகாலஜிஸ்ட் டாக்டரான அருணா, முந்தைய நாளிரவு நடந்த சம்பவங்களை அசைபோட்டபடியே வந்தாள். அந்த முன்னிரவு வேளையில் காரில் வந்துகொண்டிருந்த அருணா, ரோட்டில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்ற போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு வீடு வந்து சேர்கிறாள்.
ஆனால், கதையின் முக்கிய திருப்பம் ஆரம்பத்திலேயே வந்து அருணாவைத் திணறடிக்கப் போகிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை முன்கூட்டியே இந்தப் பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்திருந்தால் அவள் போலீஸிற்குத் தகவல் கொடுத்திருப்பாளா..?
அடிபட்டு கிடந்த அந்த இளைஞனிடம் இருந்த செல்போன் டிஸ்ப்ளே அருணாவின் போட்டோவைக் காட்டி இருந்தது. இதை அறியாத அருணா என்ன செய்ய போகிறாள்..? இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம்.
அந்த இளைஞன் யாரென்று தனக்கு தெரியாது என்று சொன்ன அருணாவை நம்பாத இன்ஸ்பெக்டர், இன்னொரு முறை அந்த இளைஞனைப் பார்த்து சொல்லும்படி, ஹாஸ்பிடலுக்கு அவளை அழைத்துச் செல்கிறார்.
அந்த இளைஞனை இதற்கு முன் பார்த்திராத அருணாவைக் கேள்விகளால் போலீஸ் இன்ஸ்பெக்டர் துளைத்தெடுக்கிறார். ஹாஸ்பிடலில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அருணாவின் அப்பா சத்தியமூர்த்திக்கு போன் செய்து ஒரு பெண் மிரட்டுகிறாள்.
இந்நிலையில் விசாரணைக்கு சென்ற இடத்தில் கடைவாயில் கருப்பு ரத்தம் வழிந்து மர்மமான முறையில் கான்ஸ்டபிள் பொன்ராஜ் இறக்க, கேஸில் மேலும் குழப்பம் நீடிக்கிறது.
அடுத்த நாள் விசாரணையில் இன்ஸ்பெக்டரும் அதே மாதிரி கருப்பு ரத்தம் சிந்தி உயிரிழக்க, கேஸ் சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. ஆறு மாதங்கள் கடந்த நிலையில் கேஸில் ஒரு துப்பும் கிடைக்காமல் போகவே உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவுவீர்களா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sivappin_niram_karuppu
Leave a Reply