இரத்தம் இல்லாத யுத்தம் – Crime Novel

படிப்பு வாசனையே அறிந்திராத பழங்குடியினர்கள் வாழும் நரிக்கொம்பு கிராமத்தில் இருந்து எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படிக்க சொல்லி குணால், ஜெனிஃபரிடம் நீட்டினார் லென்ஸ் வார இதழின் எடிட்டர்.

சிம்பிளான வரிகளில் சிறப்பாக எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படித்த இருவரும் வியந்தனர். அந்தக் கவிதையை எழுதியிருந்த இசக்கி என்ற பெண்ணை சந்தித்து மேலும் அந்த கிராமத்தில் நடப்பவற்றை கவர் ஸ்டோரியாகக் கொண்டு வர இருவரையும் நரிக்கொம்பு ஃபாரெஸ்ட்டுக்கு அனுப்புகிறார் எடிட்டர்.

பழங்குடியினக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க அந்த கிராமத்திற்கு வந்திருக்கும் சந்தியாவைப் பற்றியும் அவளுடைய கணவன் விநோத் பற்றியும் ஊர்த்தலைவர் கொண்டப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர். இசக்கி சிறப்பாக கவிதை எழுத காரணம் சந்தியா தான் என்பதை அவர்கள் அறிகின்றனர்.

குணால்-ஜெனிஃபர் ஊருக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே இசக்கி துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். மேலும் அவளுடைய நோட்டுப் புத்தகத்தில் அவள் வரைந்திருந்த இதய வடிவ படம் போலீசைக் குழப்புகிறது.

இசக்கி இறந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி, உணவுப்பொருட்கள் அடைக்கப்பட்டிருந்த சின்ன சின்ன பிளாஸ்டிக் பொட்டலங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. தீவிரவாதிகள் காட்டிற்குள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று போலீஸ் நினைத்திருந்த வேளையில் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது.

இந்தக் குழப்பம் தீர்வதற்குள் அடுத்து வந்த தினங்களில், குணால் காணாமல் போய் பின்பு பிணமாகக் கிடைக்கிறான். அவனுடைய ரத்தத்தால் இதய வடிவத்தைப் படமாக வரைந்து விட்டு இறந்திருந்தான். அவன் பிணத்திற்கு அருகே, இருதயம் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் ஒரு யானையும் இறந்து கிடக்கிறது.

கொலை செய்யப்பட்டு இறந்த இசக்கியும் குணாலும் விட்டுச் சென்ற இதய வடிவ தடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிப்பது போலீசைத் திணற வைத்தது. இந்நிலையில் காட்டிற்குள் சென்ற ஜெனிஃபரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட, நூலிலையில் உயிர் தப்பிக்கிறாள்.

நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் காரணம் தீவிரவாதிகளின் ஊடுருவலா..? இசக்கி-குணால் விட்டுச் சென்ற தடயங்கள் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும்..? ஜெனிஃபரை சுட்டது யார்..? அனைத்து சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #rattham_illadha_yuttham

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=317

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: