என்றாவது ஒருநாள்..! – Crime Novel

தந்தையுடன் மெட்ராஸில் இருந்து வந்திருந்த புனிதா, நாலு நாளாக அவளுடைய வீடு பூட்டிக் கிடப்பதாக பக்கத்து வீட்டு மாமி கூறியதும் அதிர்ச்சி அடைகிறாள். தன்னுடைய கணவன் ராதாகிருஷ்ணனுடைய ஆபிஸ் நம்பருக்கு போன் செய்த போது அவன் மெட்ராஸிற்கு சென்றிருப்பதாக கூறியவுடன் மேலும் கலக்கமடைந்தாள்.

சற்று நிதானித்த அவள் பிறகு மாமியிடம் இருந்து கீ பன்ச்சை வாங்கி வீட்டைத் திறக்க முற்படுகிறாள். அதற்குள் ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பார்த்து விடுவோம். டயர் கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்யும் ராதா, பகுதி நேர கவிஞனாக மாறிப் பின் சினிமாவிற்குப் பாட்டெழுத வாய்ப்பு தேடி அடிக்கடி மெட்ராஸ் சென்று விடுவது வழக்கம்.

இந்த முறை வழக்கத்திற்கு மாறாக அவன் மெட்ராஸ் வருவதை புனிதாவிற்கு தந்தி குடுக்காமல் விட்டதால் தான் அவள் சற்று பயத்துடனேயே இருந்தாள். காரணம் சிகரெட் வாசனையே பிடிக்காத அவன், சில காலமாக பிராந்தி, விஸ்கி என்று சகலத்திற்கும் பழக்கப்பட்டிருந்தான்.

புனிதா வீட்டிற்கு உள்ளே சென்ற சில மணித்துளிகளில் தந்தி ஒன்று கிடைக்கிறது. நவயுகா கிரியேஷன்ஸ் என்ற படக் கம்பெனியிலிருந்து கிடைத்த தந்தியைப் பார்த்து அதில் இருந்த நம்பரைத் தொடர்பு கொள்ள, மறுமுனை மௌனிக்கிறது.

அடுத்ததாக ஆபிசிற்குச் சென்ற புனிதா, அங்கிருந்து அந்தப் படக் கம்பெனியைத் தொடர்பு கொள்ள, ராதா எங்கே என்று அவர்கள் இவளிடம் கேட்கிறார்கள். திடுக்கிட்ட அவள் முதலாளி தாசப்பாவிடம் விசயத்தை சொல்லி லீவு வாங்கிக்கொண்டு கணவனைத் தேடி தந்தையுடன் மெட்ராஸ் செல்கிறாள்.

தாசப்பாவின் முயற்சியால் மெட்ராஸில் புனிதாவிற்கு உதவ விவேக் வருகிறான். முதலில் ஹோட்டலுக்குச் சென்று விசாரிக்க நினைத்த அவர்களுக்கு அங்கு திடுக்கிடும் விதமாக ராதாகிருஷ்ணனின் பிணம் அழுகிய நிலையில் கிடைக்கிறது.

ஹோட்டல் அறையை சோதனையிட்ட விவேக்கிற்கு ஜே.டி என்ற பெயரில் ராதாகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைக்கிறது. பிரபலமாகாத நடிகை ஜெயதாரா தான் ஜே.டி என்பதும், ராதாகிருஷ்ணனுக்கும் ஜெயதாராவிற்கும் உள்ள தொடர்பையும் விவேக் கண்டுபிடிக்கிறான்.

ஸ்வீட்டில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டிருப்பதை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் உறுதி செய்ய, ராதாகிருஷ்ணனின் எதிரிகளை லிஸ்ட் போடுவதற்காக மதுரை செல்ல முடிவெடுக்கிறான் விவேக்.

ஈமக்கிரியைகள் முடிந்து புனிதாவுடன் மதுரைக்கு வந்த விவேக், ராதாவின் அறையை சோதனையிடுகிறான். ராதாகிருஷ்ணனின் டைரியிலிருந்து தந்தி அனுப்பிய ரசீது கிடைக்க கொலையாளியை நெருங்கிவிட்டான் விவேக்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #endravadhu_orunaal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=430

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: