சினிமாவில் கொஞ்ச கொஞ்சமாகப் பாட்டெழுதி பிரபலமாகிக் கொண்டு வந்தான் குறிஞ்சி. அன்றைய தினம் ஒரு பத்திரிக்கைக்குக் காரசாரமாகப் பேட்டி கொடுத்து முடித்துவிட்டு பாட்டை டைரக்டரிடம் பாடிக் காட்ட இருந்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம்.
பாடகியான தன் காதலி ரமாவும் குறிஞ்சியிcன் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டுப் பாராட்ட, டைரக்டரின் எதிர்பார்ப்போ வேறு மாதிரி இருந்தது. ஏற்கனவே எடுத்த படத்தில் புதுமுக கவிஞர் மோதி எழுதியிருந்த ரெட்டை அர்த்தப் பாடல்கள் ஹிட் அடித்ததால் குறிஞ்சியையும் அதேபோல் ரெட்டை அர்த்த வரிகளில் பாட்டெழுத சொன்னார் டைரக்டர்.
கவிஞனான அவன் மோசமான பாட்டெழுத விரும்பாமல் அந்த ரிக்கார்டிங்கை கான்செல் செய்தான். இதற்கிடையில் ரமா தன்னுடைய திருமணத்திற்கு தன் மாமாவிடம் பேசி சம்மதம் வாங்கியிருந்தாள்.
அதிர்ஷ்டவசமாக குறிஞ்சி அடுத்தநாள் ஹைதராபாத் போக வேண்டி இருந்ததால், திரும்பி வந்தவுடன் பிரஸ் மீட்டைக் கூட்டி திருமண விசயத்தைச் சொல்ல இருவரும் திட்டம் போட, விதி வேறு மாதிரியாகத் திட்டம் போட்டிருந்தது.
ஹைதராபாத்திலிருந்து திரும்பி வந்த குறிஞ்சி, ரமாவை விட்டு விலக ஆரம்பித்தான். அதற்கு காரணம் வெட்ட வெளிச்சம் என்ற பத்திரிக்கையில் ரமாவைப் பற்றி வந்திருந்த கிசுகிசு. குறிஞ்சி தன்னை அவமானப்படுத்தியதால் கோபமடைந்த ரமா, மாமன் மகனையே திருமணம் செய்து கொள்கிறாள்.
இனி சினிமாவிற்குப் பாட்டெழுதுவதை நிறுத்தப் போவதாக பிரஸ் மீட்டில் பேட்டி கொடுக்கிறான் குறிஞ்சி. இந்த விஷயம் நடந்து சில நாட்களிலேயே காணாமலும் போகிறான்.
இந்நிலையில் வெட்ட வெளிச்சம் என்ற பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர் ரமாவை சந்தித்து அவளைப் பற்றிய கிசுகிசுவை எழுதச் சொன்னதே குறிஞ்சி தான் என்று கூறுகிறான். இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்த ரமா, குறிஞ்சியை எப்படியாவது கண்டுபிடித்து, அவதூறாகத் தன்னைப் பற்றி எழுத சொன்னதற்கு காரணம் கேட்க நினைத்தாள்.
அல்லியூர் கிராமத்தில் சங்கர நாராயணனாக வாழ்ந்து கொண்டிருந்த குறிஞ்சியைக் கண்டுபிடித்த ரமாவிடம் அவன் உண்மையைச் சொல்லத் தயாராக இல்லை. மேற்கொண்டு கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு போடப் போவதாக சொல்லிவிட்டு கோபமாக ரமா சென்று விட..
குறிஞ்சி (எ) சங்கர நாராயணன் யார்…??
#one_minute_one_book #tamil #book #crime_novel #rajeshkumar #en_vaanam_miga_arugil
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=733
Leave a Reply