சங்கர நாராயணன் டேப்பில் ரெக்கார்ட் செய்து எடுத்து வந்திருந்ததைப் போட்டுப் பார்த்த விவேக் அதிர்ந்து போனான். இரண்டு நபர்கள் உரையாடிய சம்பாஷணையின் சாராம்சம் இதுதான்..தமிழ்நாட்டில் வைத்து பிரதமர் ஆகாஷைக் கொல்வது.
இதற்கு நடுவில் எதிர்கட்சித் தலைவர் காந்திலால் வயது மூப்பின் காரணமாக பாத்ரூமில் கால் இடறி கோமா ஸ்டேஜிற்குச் செல்கிறார். பிரதமரின் செயலாளர் வாத்வா சொன்ன இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்த பிரதமர் ஆகாஷ், எப்பாடு பட்டாவது காந்திலாலைக் காப்பாற்ற சொல்கிறார்.
பிரதமர் கூறியதாகச் சொல்லி காந்திலாலை இயற்கையாக இறந்த மாதிரி ஏற்பாடு செய்ய சொல்கிறார் வாத்வா. உள்துறை அமைச்சர் உத்தம் பாண்டேவும் வாத்வாவும் சேர்ந்து போட்ட திட்டப்படி டாக்டரைக் கொலை செய்கின்றனர்.
இந்த இடத்தில் எதிரிகள் செய்த தவறு, விசாரணைக்கு வந்த விவேக்கின் பார்வையில் சிக்குகிறது. எதிராளியின் அடுத்த மூவைத் தெரிந்துகொள்ள கிடைத்த தடயத்தை வைத்து விவேக் ஒரு திட்டம் தீட்டுகிறான்.
ஏற்கனவே விவேக் தமிழ்நாட்டில் அலர்ட்டாக இருந்ததால் ஏர்போர்ட்டிலேயே எதிரி மாட்டிக் கொள்கிறான். ஆனால், எதிர்பாராத விதமாக சயனைட்டை சாப்பிட்டு அவன் இறக்கிறான்.
தமிழ்நாட்டில் திட்டம் பாழானதால் பாராளுமன்றத்திலேயே வைத்து பிரதமரை முடிக்கத் திட்டம் போடுகிறார் உத்தம் பாண்டே. பிரதமருடன் நெருக்கமாகப் பழகும் அமைச்சர் ரமணசிங்கைப் போலவே இருக்கும் ரவிசங்கரை, அவனுக்குத் தெரியாமல் மனித வெடிகுண்டாக மாற்றி பிரதமர் ஆகாஷைக் கொல்ல மறுபடி ஒரு திட்டம் போட்டார் உத்தம்.
பிரதமருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பைக் கூறியிருந்தான் விவேக். ஆனால் இதையெல்லாம் தாண்டி ரமணசிங் கடத்தப்பட, பிரதமரின் நிலை என்ன..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #andha_rattha_naatkal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1068c
Leave a Reply