தப்பு செய்.! தப்பிச்செல்..!!

“குடுவைக்குள் இருந்து வெளியே எடுத்த 30 வினாடிக்குள் வெடிக்கும் ஒப்வா லசிகா ஒரு காந்தம் போன்று செயல்படக்கூடியது. டார்கெட் செய்த இடத்தில் இருக்கும் ஏதாவதொரு காரில் ஒட்ட வைத்துவிட்டால், பெட்ரோல் டாங்க் வெடித்து சேதாரம் அதிகமா இருக்கும் என்பதால் இந்த வெடிபொருள் தீவிரவாதிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது” என்ற தகவல் லலித் சர்மாவின் அடிவயிற்றைக் கலக்கியது.

இந்தியாவின் இராணுவ ஏர் மார்ஷல் பிலிப்ஸ் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக ரகசியமாக ரோமிற்கு வந்து இத்தாலியின் இராணுவ அமைச்சரை சந்தித்து சென்ற விபரம் லலித் சர்மாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் ஒப்வா லசிகா என்னும் வெடிபொருளை உபயோகித்து நாட்டை ஏராளமாக சேதப்படுத்தியிருந்த நிலைமையில் ஏர் மார்ஷல் பிலிப்ஸின் ரகசிய சந்திப்பு ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியத் தூதர் லலித் சர்மாவை உடனடியாக சந்திக்க ரோம் வருவதாக இருந்தார் இராணுவ துணை அமைச்சர் சதுர்புஜன். குறிப்பிட்ட அந்த விமானத்தில் வராமல், ஆச்சர்யப்படும் விதமாக ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே ரோம் வந்து சேர்ந்திருந்தார் அவர். காரணம் ஒப்வா லசிகாவை இத்தாலியில் தயாரிப்பதாக வந்திருந்த செய்தியின் உண்மை நிலையை அறிந்து கொண்டு, ஏர் மார்ஷல் பிலிப்ஸிற்கு இராணுவ கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுக்க ஆதாரம் தேடி ரோம் வந்திருந்தார் சதுர்புஜன்.

கதையில் திடுக்கிடும் திருப்பமாக தமிழ்நாட்டின் கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்த ஒப்வா லசிகா வெடிபொருட்கள் தயாரிக்கப்படுவதாக சதுர்புஜனுக்குத் தகவல் கிடைக்கிறது. இதற்கு நடுவில் சினிமா சூட்டிங் எடுக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு ஒரு குரூப் செந்தமிழன் தலைமையில் தமிழ்நாட்டின் கோபிச்செட்டிப்பாளையத்தை வந்தடைகிறது.

சூட்டிங்கிற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார் சுந்தரமூர்த்தி. அவருடைய நண்பர் விநாயகம் அனுப்பி வைத்த பையன் என்பதால் செந்தமிழன் மேல் அவருக்கு எந்தவொரு சந்தேகமும் வரவில்லை.  பண்ணை வீட்டு பழங்கால பங்களா ஒன்று சூட்டிங்கிற்குத் தேவைப்பட, ஊரில் உள்ள பங்களாவைக் காண்பித்த்தார் சுந்தரமூர்த்தி. முதலில் படம் எடுக்க அனுமதி கொடுத்த பண்ணையார் சித்தராமலிங்கைய்யா, பிறகு மறுத்துவிட செந்தமிழனின் எண்ணம் நிறைவேறாமல் போகிறது.

இந்நிலையில் படம் எடுப்பதாக வந்திருந்த செந்தமிழனும் அவனது படக்குழுவும் நள்ளிரவில், நான்கு குரூப்பாகப் பிரிந்து திடீரென கண்ணுக்கு சிக்காமல் மறைந்து விடுவதைப் பேட்ரோலிங்கில் இருந்த போலீஸ் கண்டுபிடிக்கிறது. நிலைமை புரியாத போலீஸ் செந்தமிழனை அர்ரெஸ்ட் செய்ய அவனைப் பற்றிய உண்மைகள் வெளியே வந்ததா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #thappu_sei_thappi_sel

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=46

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: