விவேக் வியூகம்

சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் மிட்நைட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்த மங்களேஷும் பாசுவும் விஜிலன்ஸ் ஆபிசர் சுக்தேவ்வை திட்டிக்கொண்டே சென்றனர். இதுவரை இரவில் இப்படி அழைத்திராத சுக்தேவ் திடீரென அழைத்ததற்கான காரணம் புரியாமல் அவர் வீட்டை அடைந்தனர்.

வீட்டிற்குள் செல்லும் முன்…

நாட்டின் மொத்த கரன்சி நோட்டுக்களையும் பிரிண்ட் செய்யும் இண்டியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் (நாசிக்) எலெக்ட்ரானிக் இன்ஜீனியர்ஸாக வேலை பார்க்கும் இருவரும் சுக்தேவ் வீட்டை அடைந்த பொழுது உட்கார்ந்த நிலையில் அப்பொழுது தான் ரத்தம் சிந்தி அவர் இறந்து கிடந்தார்.

திடுமென அந்த கேட்டிற்குள் வேன் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய நபர்களின் கைகளில் வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம்பிடித்திருந்தன. வந்திருந்த நபர்கள் கேள்விக்கு மேல் கேள்வியைக் கேட்டுக்கொண்டே போக பதில் தெரியாத பாசுவும் மங்களேஷும் குழம்பினர்.

அவர்களின் கோபத்தை உபயோகித்து வாட்ச்மேனும் பாசுவும் வெளியே ஓட, தப்பிக்க நினைத்த மங்களேஷ் அடிபட்டு கீழே வீழ்ந்தான். அவனை அங்கேயே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதிரிகள் அங்கிருந்து நகர…

கேஸ் ஹிஸ்டரியைப் படித்து முடித்த விவேக், உடனே நாசிக் புறப்படாமல் முதலில் விஷ்ணுவை அனுப்பி வைத்தான். சில ஏற்பாடுகளைச் செய்து முடித்த விவேக்கும் இரண்டு நாளில் நாசிக் கிளம்பினான்.

விவேக் ட்ராவலர்ஸ் பங்களாவிலேயே தங்கிக்கொள்ள, ஹோட்டலில் தங்கியிருந்த விஷ்ணுவிற்கு போன் செய்துவிட்டு அப்படியே தூங்கி விடுகிறான். வெகுநேரமாகியும் விஷ்ணு வராமல் போகவே விவேக்கிற்கு சந்தேகம் வந்து திரும்ப போன் செய்ய போனை எடுத்த விநாடி, கழுத்தில் ஏதோ நெருட திரும்பிப் பார்த்த விவேக் அதிர்ந்தான்.

வேலைக்காரன் துப்பாக்கியோடு நின்றிருந்தான். பிறகு தான் விஷ்ணு கடத்தப்பட்ட விஷயம் விவேக்கிற்குத் தெரியவருகிறது. மங்களேஷ் கொலை விசாரணை மேலோட்டமானதாக இருக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு அகலக்கால் வைக்க நினைத்தால் விஷ்ணு கொல்லப்படுவான் என்பதையும் அவர்கள் விளக்குகிறார்கள்.

வியூகம் வகுத்து வந்த இடத்தில் அவர்களின் வியூகத்தில் சிக்கிக் கொண்டிருந்த விவேக், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான். இதற்கிடையில் எதிரிகள் எச்சரித்தது போல போன எல்லா இடத்திலும் மேலோட்டமான விசாரணையை மட்டுமே முடித்து வந்தான்.

ஒருநாள் வாய்ப்பு கிட்ட ஹோட்டலில் சாப்பிட சென்ற விவேக் அங்கிருந்து தப்பித்து, தன்னைப் பின்தொடர்பவனைக் கண்டுபிடித்து அவனிடம் உண்மையை விசாரிக்க, அவன் விஷத்தை விழுங்கி இறக்கிறான். அவனுடைய காரில் கிடைத்த தடயங்களை வைத்து எதிரியை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைக்கிறான் விவேக்..

இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vivek_viyugam

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: