DAY04 | அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்..?!

அவனுக்கு ப்ளட் கேன்சர் என்பதை அறிந்த நிமிடத்தில் இருந்தே நடைப் பிணமாக மாறிவிட்டிருந்தான் பரணி. ஆறு மாதம் மட்டுமே அவன் உயிருக்கு கெடு வைத்திருந்தார் டாக்டர். துக்கம் தாளாத அவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான்.

தூரத்தில் ஒரு ரயில் வருவது தெரிய, விழுவதற்காக தயாரானான் பரணி. கண்ணை மூடிக்கொண்டு அவன் ரயிலின் முன்னே பாய நினைத்த விநாடி ஒரு கை அவனை பின்னுக்கு இழுத்தது.

பரணியைக் காப்பாற்றிய அவன் தன்னை சுபாஷ் என்று அவனிடம் அறிமுகம் செய்து கொண்டான். பரணியின் தற்கொலைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட சுபாஷ், தனக்காக சில வேலைகள் செய்து கொடுத்தால் அவனுடைய குடும்பத்திற்கு உதவுவதாகச் சொல்கிறான்.

என்ன வேலை என்றே தெரியாமல் சுபாஷின் வார்த்தைக்கு ஒப்புக்கொண்டான் பரணி. ஆனால், அவன் சிக்கலில் சிக்கியது அப்போது அவனுக்குத் தெரியாது. இன்னும் ஆறே மாதத்தில் இறக்கவிருப்பதால் எதையும் செய்யத் தயாராகவே இருந்தான் அவன்.

அதே சமயம் நகரத்தில் வரிசையாக சிலர் கொலை செய்யப்பட்டு வந்தனர். அதுவும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கரிக்கட்டையைப் போல அவர்களின் உடலை எரித்திருந்தனர். இதை எல்லாம் செய்வது ஒரு ஆளா..? இல்லை கும்பலா..? என்பது தெரியாமல் போலீஸ் திண்டாடியது.

இறந்தவர்களின் நெற்றியில் ‘அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்’ என்று காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதை வைத்து இறந்தவர்கள் ஜட்ஜாக இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸ் வருகிறது. கொலைகாரனின் மோட்டிவ் என்ன..?

இதையும் தாண்டி ஓய்வுபெற்ற ஜட்ஜ் சுதந்திராதேவியையும் குறிவைக்கிறான் கொலைகாரன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவனிடம் இருந்து தப்பிய ஜட்ஜ் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். மேலும் கொலையாளி இரண்டாவதாகக் கொலை செய்த நபரிடம் இருந்து போலீசிற்கு மிக முக்கிய தடயம் கிடைக்கிறது.

அந்தக் கோணத்தில் கேஸை நகர்த்திய போலீஸ் படிப்படியாக கொலைகாரனை நெருங்க..அவன் அடுத்த பலி யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #objection_your_honour

இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading