DAY05 | சொர்க்கத்தின் புதிய முகவரி..?

துணிக்கடையில் பர்சேஸிங்கை முடித்து விட்டு அப்போதுதான் வீடு திரும்பினர் உதயகுமாரும் வித்யாவும். வீட்டின் பூட்டைத் திறக்கச் சென்ற வித்யா அதிர்ச்சி அடைந்தாள். காரணம்..பூட்டப்பட்டிருந்த வீடு திறந்து கிடந்தது.

திடுக்கிட்ட இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்க்க, அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன. வீட்டின் பின்புறம் சென்று பார்த்த வித்யாவின் கால்களில் ஏதோ ஒட்டியது. கீழே குனிந்து பார்த்த வித்யா வீறிட்டாள்.

இரத்தத் துளிகள்..

துணிச்சலை வரவழைத்துக்கொண்ட உதயகுமாரும் வித்யாவும் வீட்டை அலசுகின்றனர். ரத்தத் திட்டுகளைப் பின்தொடர்ந்து செல்ல அது பாத்ரூமில் முடிந்திருந்தது.

பாத்டப்பில் ஒரு பெண் வாய்பிளந்த நிலையில் செத்திருந்தாள். ஏற்கனவே பதற்றத்தில் இருந்த வித்யா, வீட்டில் பிணத்தைப் பார்த்ததும் உச்சக்கட்ட அதிர்ச்சிக்குப் போகிறாள்.

பிசினஸ் எதிரி யாரோ செய்த வேலை என்று முடிவு செய்த உதயும் வித்யாவும், விசயத்தைப் போலீசிற்குக் கொண்டு செல்ல திட்டமிடுகின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக போலீசே வீட்டிற்கு வருகிறது.

போலீஸிடம் மழுப்பிய இருவரும் பிணத்தை ரயில்வே ட்ராக்கில் போட்டுவிட்டுத் திரும்ப, வழியில் அதே போலீஸ் இவர்களை வழிமறிக்கிறது. நடந்த சம்பவங்களை சொல்லிய உதய்யிடம் பணத்தைக் கேட்டு சமரசம் செய்ய நினைக்கிறார் இன்ஸ்பெக்டர்.

ஒப்புக்கொண்ட உதய்யை கொலையாளி போனில் மிரட்டுகிறான். அவனும் பணம் கேட்டு மிரட்ட உதய்யும் வித்யாவும் தற்கொலை முடிவு எடுக்க..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sorkkatthin_puthiya_mugavari

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=351

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: