ஃப்ளைட் 747 பயணிகளுடன் பறக்கத் தயாராகக் காத்திருந்தது. அன்றைக்கு அந்த விமானத்தில் லண்டன் வரை பறக்க இருந்த பயணிகளில் நிறைய பேர் பிரபலமானவர்கள். இதில் விவேக்கும் ஐபிஎஸ் கிரணும் அடக்கம். ஸ்காட்லான்ட் யார்டின் ஆண்டு விழா செலிப்ரேசனில் கலந்து கொள்வதற்காகச் செல்கின்றனர்.
ஏற்கனவே வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் ஃப்ளைட்டை எடுக்க பைலட் பகாடியாவும் நிரம்ப யோசித்தார். கடைசியில் ஃப்ளைட்டை எடுக்க வேண்டிய கட்டாயம்.
விண்ட்ஸர் தீவைக் கைப்பற்றத் திட்டம் போட்டிருந்த கிம்போ நாட்டு இராணுவ வீரர்களால் ஃப்ளைட் கிம்போ ஏர்போர்ட்டிலேயே வேறு வழியின்றி தரையிறக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் பதற்றத்தில் இருக்க, கிம்போ ராணுவ வீரனை எதிர்த்துக் கேள்வி கேட்ட பயணியை பாரபட்சம் பார்க்காமல் சுட்டுத் தள்ளுகின்றனர் கிம்போ வீரர்கள்.
அடுத்ததாக ஃப்ளைட்டின் பைலட்டையும் கோ-பைலட்டையும் சுட்டுத் தள்ளிய இராணுவத்தினரின் பார்வை பெண்கள் மேலே விழுகிறது. கோபமடைந்த கிரண் இராணுவ வீரர்களிடம் சண்டை போட, கிரணைக் காப்பாற்ற வந்த விவேக்கையும் சேர்த்து ரன்வேயில் ஓட விட்டு சுட்டுத் தள்ள முடிவெடுக்கிறான் ஜெனரல்.
கணநேரத்தில் திட்டம் போட்ட விவேக், கிரணுடன் ஜீப்பில் தப்பித்துச் சென்று கிம்போ நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைகிறான். ஆனால், அங்கேயும் அவர்களைத் தேடிவந்த இராணுவ வீரர்கள் தூதரைக் கொலை செய்கின்றனர்.
மொழி தெரியாத நாட்டில் சிக்கிக்கொண்ட இருவரும் ஒரு சாக்கடைக்குள் மறைந்துகொள்ள, சீக்கிய இளைஞன் அவர்களுக்கு உதவி செய்கிறான். இந்தியாவின் மேல் அன்பு கொண்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹசன் வீட்டில் மூவரும் தங்குகின்றனர்.
பயணிகளுடன் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கான வழியை யோசித்துக்கொண்டிருந்த விவேக்கிற்கு எந்த வழியும் புலப்படவில்லை. அண்டை நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உதவி கேட்க ஹசன் ஒரு திட்டம் போட்டுக் கொடுக்கிறார். ஆனால், அதிலும் சில ஓட்டைகள் இருந்தன.
கதையின் திருப்புமுனையாக கிம்போ ராணுவம் ஏவுகணையை ஏவி விண்ட்ஸர் தீவைத் தகர்க்க திட்டம் போட்டிருப்பதை அறிகிறான் விவேக். அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய விவேக் எப்படி அனைத்து பயணிகளையும் காப்பாற்றி இந்தியா வந்து சேர்ந்தான் என்பதே விவேக்கின் விஸ்வரூபம்.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vivekkin_viswaroopam
இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply