தொலைந்துபோன புது காரைக் கண்டுபிடிக்கச் சென்ற போலீசிற்கு அந்தக் காரின் உள்ளே ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் உடலில் கறுப்பு பெயிண்ட்டை ஊற்றியிருந்தார்கள்.
போலீசிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கொலையைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்க அதிரா அப்பார்ட்மெண்ட்டிற்குச் செல்கிறார் போலீஸ் ஆபிசர் சந்திரசூடன். ஆனால் அங்கு அவருக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
மர்மங்களுக்குப் பெயர் போன அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றனர். மயானத்தின் மீது கட்டப்பட்ட அப்பார்ட்மெண்ட் எனவும், அமானுஷ்யங்கள் நிறைந்த அப்பார்ட்மெண்ட் எனவும், இதற்கு முன் அந்த அப்பார்ட்மெண்ட்டில் ஃப்ளாட் நெம்பர் – 144-இல் தங்கியிருந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்திருப்பதாகவும் செய்திகள் சந்திரசூடனை எட்டுகிறது.
மேலும் சிசிடிவி இல்லாத காரணத்தால் கொலை நடப்பதற்கு ஏதுவான இடம் அதிரா அப்பார்ட்மெண்ட் என்பதை சந்திரசூடன் உணர்கிறார். காலை நேரத்திலேயே அந்த அப்பார்ட்மெண்ட் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருப்பதை அறிகிறார்.
இதற்கிடையே சந்திரசூடனைச் சந்திக்க பிரபல பத்திரிக்கையின் ஆசிரியர் வாஹினி என்ற பெண் வருகிறாள். சமூக நலனில் அக்கறை கொண்ட லட்சணா என்ற ஜர்னலிஸ்ட்டைப் பற்றிக் கூறிய அவள், சில நாட்களாக அவள் காணாமல் போனதைக் குறிப்பிட்டு லட்சணா தற்போது ஈடுபட்டிருக்கும் கேஸைப் பற்றி சொல்கிறாள்.
வாஹினியுடன் சென்று லட்சணாவின் ஹாஸ்டல் ரூமை சோதனையிடுகிறார் சந்திரசூடன். அங்கு அவருக்கு அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பற்றிய லட்சணாவின் குறிப்புகள் கிடைக்கிறது. கிடைத்த அனைத்து ஆதாரங்களும் கைகாட்டுவது அதிரா அப்பார்ட்மெண்ட்டையே…
லட்சணா ஈடுபட்டிருந்த கேஸ் நம்மையும் நம் சுற்றத்தாரையும் நம் குழந்தைகளையும் பாதுகாக்க அனைவரும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டியவை..
செக்ஸ் டூரிஸம்(Sex Tourism)…பீடோ ஃபைலிக்(Pedophilic) போன்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
oneindiatamil-ல் தொடர்கதையாக வெளிவந்து கொண்டு இருக்கும், ராஜேஷ்குமார் அவர்களின் ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் இப்போது இலவசமாக உங்களுக்காக..
விறுவிறுப்பான திருப்பங்களுடன் அமானுஷ்யங்கள் நிறைந்த இக்கதையை இலவசமாக வாசிக்கக் கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்..
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #flat_no_144_adhira_apartment
want to read free : https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/flat-number-144-adhira-apartment-episode-1-413003.html
Leave a Reply