முகத்தில் சிறு சிறு சலனங்களுடன் போலீஸ் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார் டாக்டர் இந்துவதனா. அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒன்று அந்த அறையில் நிகழ்ந்தது. டாக்டர் இந்துவதனா தனக்குத் தானாகவே விஷ ஊசியைப் போட்டுக்கொண்டாள். அனைவரின் சாட்சியாக நிமிட நேரத்தில் நிகழ்ந்த தற்கொலை. சிகிச்சைப் பலனின்றி இறந்து போனாள்.
சில மணி நேரங்களுக்கு முன்…
குரு, சங்கவி, மனோ, ஸ்ருதி நால்வரும் போலீஸ் ஆபிசர் நவநீதனுடன், டாக்டர் இந்துவதனாவை சந்தித்து, கயல்விழி என்ற இளம்பெண்ணைப் பற்றித் தெரிந்துகொள்ள குட் பெட்டர் பெஸ்ட் ஹாஸ்பிடலுக்கு அந்தக் காலை வேளையில் வந்திருந்தனர்.
குரு, சங்கவி, மனோ, ஸ்ருதி இரண்டு வருடங்களுக்கு முன்னால் ரோட்டில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த கயல்விழியிடம் இருந்து உறுப்புதானம் பெற்றவர்கள். அவர்கள் நால்வருக்கும் ஆபரேசன் செய்த டாக்டர்தான் இந்துவதனா.
இப்போது…
இந்துவதானா இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பு இறந்த இந்துவதனாவின் விசயத்தில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு ஒருவன் ஹாஸ்பிடலுக்கே வந்து ஸ்ருதியை மிரட்டிச் செல்கிறான். அங்கே இருந்த சிசிடிவி கேமராவின் பதிவை வைத்து ஆளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
மிரட்டிச் சென்றவன் தன்னுடைய உண்மையான முகத்தை மறைக்க இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஃசாப்ட் சிலிகான் ரியலிஸ்டிக் மெம்பரேனை உபயோகித்திருப்பது பாரன்சிக் மூலமாக தெரிய வருகிறது.
இதுவரை நிகழ்ந்த விஷயங்களின்படி இது ஒரு பக்காவான ஹை-டெக் க்ரைமாக இருக்கலாம் என நவநீதன் அனுமானிக்கிறார். அடுத்தகட்டத்திற்கு கேஸை நகர்த்த, அந்த தடைசெய்யப்பட்ட மெம்பரேனைத் தயாரிக்கும் கம்பெனியின் இந்திய பார்ட்னரான அபிஷேக் என்பவரிடம் விசாரணை நடத்த அப்பாய்ண்ட்மென்ட் வாங்குகிறார் நவநீதன். ஆனால் நவநீதனை சந்திப்பதற்கு முன்பே அபிஷேக் வித்தியாசமான முறையில் இறக்கிறார். மேலும் ஒரு மரணம்?!
அபிஷேக்கின் அப்பாவிடம் இருந்து எந்த உபயோகமான தகவலும் கிடைக்காமல் போகவே, அபிஷேக்கின் பிஏ மிருதுளாவை விசாரிக்க அவளுடைய வீட்டிற்குச் செல்கிறார் நவநீதன். மிருதுளாவின் வீடு நான்கு நாட்களாக பூட்டிக்கிடப்பதை அறிந்தபோது அவரின் சந்தேகப்பார்வை அவள் மேல் நிலைத்தது. தனக்கு ஏதோ ஒரு ஆதாரம் இங்கு கிடைக்கப்போவதாய் நினைத்தவர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பின்…
வீட்டிற்குள் இருந்த எவரெஸ்ட் குளிர் அவரையும் தீண்டியது. மேலும் நீல வண்ணப் புள்ளிகள் வீடு முழுவதும் சின்னச்சின்னத் துணுக்குகளாக அவருடைய கண்களுக்குப் புலப்படுகிறது. ஒவ்வொரு அறையாக சோதனையிட்டு வந்த நவநீதன் கண்ணில் படுக்கையறையில் இருந்த இரண்டு பிரிட்ஜ் தென்படுகிறது. அதற்குள்…
குட்டிகுட்டி டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த மருந்துப் பொருட்களின் பெயர்களைப் ஆர்வமாக படித்த நவநீதனுக்கு அப்போதுதான் புரிந்தது தான் தொடங்கியது விசாரணையை அல்ல ஒரு விபரீதத்தை என்று..
இந்துவதனாவின் கார் டிரைவர் சொன்ன ஒரு தகவல் கயல்விழியின் மரணத்தில் ஒரு கேள்வியை வைத்தது. அக்கேள்வியின் பதிலுக்கு பதிலாக இந்துவதனாவின் மரணம் கிடைத்து ஏன்? இந்துவதனா இறப்பு செய்தி அந்த அறையைவிட்டு வெளியே வருவதற்கு முன் வெளியில் இருந்து வந்த யாரோ ஒரு ஆசாமிக்கு அவள் செத்துப்போனது தெரிந்தது எப்படி? அந்த வீட்டில் நவநீதனுக்கு கிடைத்தது என்ன?
விறுவிறுப்பை எட்டிப் போகும் இந்நாவலின் மர்மங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்களுடன் BYNGE APP – ல் முற்றிலும் இலவசமாக இணையுங்கள்.
BYNGE APP-ஐ பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்..
iOS : https://apps.apple.com/in/app/bynge/id1544942239
Android : https://link.bynge.in/Wck1uFxtqqRbs2qv8


#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #nalliravu_seidhigal_vaasippadhu_durga #bynge_app
Leave a Reply