நவம்பர் ராத்திரிகள் – Crime Novel

தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை கொடைக்கானலில் உள்ள மாமா வீட்டிற்கு குடுத்து விட்டு கொண்டை ஊசி வளைவுகளில் நிதானமாக வண்டியை வளைத்து ஓட்டினான் சுபாஷ். மாலை நேர இருள் கவியும் நேரம். பைக்கை மறித்து நின்றாள் சித்ரா.

காதலிப்பதாகச் சொல்லி சித்ராவுடன் ஊர் சுற்றிய சுபாஷ் பணக்கார சம்பந்தம் கிடைக்கவும் அவளைக் கேவலமாகப் பேசிவிட்டு அங்கிருந்து நழுவுகிறான். நடக்க இருந்த கல்யாணத்தைத் தடுத்து, சுபாஷின் மூச்சை நிறுத்த சித்ராவின் அண்ணன் அவளுக்கு ஒரு திட்டம் போட்டுக் குடுக்கிறான்.

எதிர்பாராத விதமாக அடுத்த நாள் காலையில் கையில் வண்டி டயருடன் ஒரு வளைவில் பிணமாகக் கிடக்கிறான் சுபாஷ். அவனுடைய வண்டி 10-வது கிலோமீட்டரில் நிறுத்தப்பட்டிருப்பதைப் போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.

மேலும் சுபாஷின் பாக்கெட்டில் இருந்த பெட்ரோல் பங்க் பில்லை தடயமாக வைத்து போலீஸ் கேஸை நகர்த்துகிறது. பங்க்கில் கிடைத்த தகவலின் படி சுபாஷின் க்ளோஸ் பிரெண்ட் ராஜாவைப் பற்றிய தகவல் போலீசிற்குக் கிடைக்கிறது.

சுபாஷ் இறந்த சில நாட்களிலேயே ராஜாவும் திடீரென மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறான். அவனைப் பரிசோதித்த பேமிலி டாக்டர் அவனுக்கு ப்ளட் கேன்சர் இருப்பதை உறுதி செய்கிறார்.

பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக மகனுக்கு கேன்சர் என்ற உண்மையை மனைவியிடம் மறைத்த செல்வராஜன், ராஜாவிற்கு உடனே திருமணம் நடத்த முடிவெடுக்கிறார்.

புத்திமதி சொன்ன டாக்டரையும் தன்னுடைய ஆள் பலத்தால் மிரட்டுகிறார் செல்வராஜன். பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் தான் சுபாஷின் மரணத்திற்குக் காரணம் என்பதை போலீஸ் அறிகிறது. அது என்ன சம்பவம்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #november_raatthirikal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1147

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading