இந்தியாவிற்கென ஒரு புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் கண்டுபிடிப்பில் மூழ்கியிருக்கிறாள் ராணி. சிறுவயது முதலே கம்ப்யூட்டர் துறையில் பூந்து விளையாடும் ராணி உலகம் முழுவதும் பேமஸ்.
இப்போது அவளுடைய திருமண வரவேற்பில் அவளைச் சந்திப்போம். ராணியின் திருமணத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டர் முதல் அமெரிக்க நண்பர்கள் வரை அனைவரும் ராணியைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டு செல்ல, ரவிச்சந்திரனுக்கு முகத்தில் ஈயாடவில்லை.
முதலிரவிலேயே அவளுடைய கம்ப்யூட்டர் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறான் ரவிச்சந்திரன். தன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றிப் பெருமைப்படாமல் தனக்கு கீழே தான் மனைவி என பொறாமைப்படும் கணவனை விட்டு விலகுகிறாள் ராணி.
திருமண முறிவு அவளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், கம்ப்யூட்டர் ஆராய்ச்சி அவளுக்கு எல்லாமே. அதனால், மறுபடியும் ஆபரேட்டிங் சிஸ்டம் கண்டுபிடிப்பில் இறங்குகிறாள்.
இந்நிலையில் அமெரிக்க ஆசாமி ஜார்ஜின் கட்டளைப்படி ராணியின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஒழிக்க திட்டம் போடுகிறார்கள் மணீந்தரும் சாதனாவும். ராணி தன்னுடைய ஆபரேட்டிங் சிஸ்டம் ராணி 2000-ஐ அரசு அலுவலத்தில் ப்ரோக்ராம் செய்துவிட்டு வீடு திரும்பிய சில மணி நேரத்திலேயே அந்த அலுவலத்தில் வேலை பார்த்து வந்த மோகன் சர்வர் ரூமிற்குள் நுழைந்து வைரஸைப் பரப்பி சர்வரை லாக் செய்கிறான்.
பதறிக்கொண்டு ராணியிடம் வந்த மேலதிகாரி, ராணியிடம் இதுபற்றி விசாரிக்க வெளியாளின் வேலை இது என்பதை அவள் கண்டுபிடிக்கிறாள். பிரச்சனையை சரி செய்த ராணி போலீசை வரவழைக்கிறாள்.
சர்வரில் கோளாறை ஏற்படுத்திய நபரைக் கண்டுபிடிக்க போலீசிற்கு ஒரு வழி சொல்கிறாள் ராணி. மணீந்தர்-சாதனாவிடம் தஞ்சமடைந்த மோகனை இருவரும் கொலை செய்கின்றனர்.
மோகனின் வீட்டைச் சோதனையிட்ட போலீசாருக்கு ஜார்ஜின் விசிட்டிங் கார்டு கிடைக்கிறது. ராணியின் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அழிக்க முடியாத காரணத்தினால் ராணியையே அழிக்க நினைக்கிறான் ஜார்ஜ். ராணியின் ஆபிசில் இருந்து ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கான சோர்ஸ் கோடைத் திருடிச் செல்கிறான் ஜார்ஜ்.
அமெரிக்காவிற்கு உதவுவதற்காகத் தான் இந்த திட்டம் என்பதை மணீந்தர்-சாதனாவிடம் கூறிய ஜார்ஜ் என்ற நபரே கிடையாது என்பதை போலீசின் உதவியால் கண்டுபிடிக்கிறாள் ராணி. என்றால் ஜார்ஜின் பெயரில் இவ்வளவும் செய்த அவன் யார்..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #rani_2000
இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Leave a Reply