தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ப்ளாக் ரோஸ்-க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பாரதி. அங்குதான் லதிகா தற்சயம் தங்கியிருந்தாள். லதிகா – மொத்த நாடும் பார்த்து மிரண்டு நிற்கும் துணிச்சலான ஒரு ஜர்னலிஸ்ட், பாரதியின் உயிர்த்தோழி.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த இரண்டு மந்திரிகளின் வேலை போகக் காரணமாக இருந்தவள் லதிகா. அதனால் இயல்பாகவே அவளுக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர். இந்த வேளையில் தான் பாரதி அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க ஹோட்டலுக்குச் செல்கிறாள்.
எதிரிகள் பாரதி ஹோட்டலுக்குச் செல்வதற்கு முன்பே லதிகாவைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்திருந்தனர். லதிகாவின் அறையில் துப்பாக்கியுடன் இருந்த மர்ம நபர்களை சமாளித்து தப்பித்து ஓடிக் கொண்டிருந்த பாரதியையும் லதிகாவையும் நோக்கி அவர்கள் சுட்டனர்.
லதிகா சுருண்டு விழ, பாரதியை சுட முயன்று, தோற்று அவர்கள் எதிர் திசையில் ஓடி தப்பினர். அதற்குள் சப்தம் கேட்டு அங்கு வந்த கூட்டம் லதிகாவை ஹாஸ்பிடலில் சேர்த்தது. விலா எலும்பில் குண்டுகள் பட்டிருக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள் லதிகா.
அவசரமாக ஆபரேசன் செய்தால் மட்டுமே உயிர் பிழைக்கக் கூடிய சாத்தியம் இருந்த நிலையில், ஆபரேஷன் செய்யப் போய்க்கொண்டிருந்த டாக்டர் ஹரிஹரேஷ் மர்ம கும்பல் காரில் கடத்திச் செல்கிறது.
அதிர்ஷ்டவசமாக வேலூரில் இருந்து சென்னைக்கு வந்திருந்த டாக்டர் கால்டனை ஆபரேசனுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அவரையும் கொலை செய்ய ஆள் அனுப்பப்படுகிறது.
உயிர் தப்பிய கால்டன் வெற்றிகரமாக ஆபரேஷனை முடிக்கிறார். ஆனால், லதிகாவின் உயிருக்கு வேறு விதமாக உலை வைக்கிறார்கள் எதிரிகள். தெரிந்த நர்சை விலைக்கு வாங்கி அவளை வைத்து, லதிகாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லத் திட்டம் போடுகின்றனர்.
இந்நிலையில் பாரதியையும் கொல்ல முயற்சி நடக்கிறது. போலீஸ் அனைவரும் ஆளுங்கட்சி பக்கம் இருக்க..திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத விதமாக எதிரிகள் முன் வந்த லதிகாவைப் பார்த்து திடுக்கிட..
நடந்தது என்ன..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #uyir_thirudargal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=577
Leave a Reply