Emotions – இது இல்லாம மனுஷங்களே கிடையாது. உணர்ச்சியை வெளிக்காட்டிக்காம இருக்க முடியுமே தவிர, உணர்ச்சியே இல்லாத மனுஷன்னு ஒருத்தர் இன்னும் பிறக்கவே இல்லைன்னு தான் சொல்லனும்.
சிக்கலான ஒரு சூழ்நிலை வரும்போது அசராமல், மனம் தளராமல், சுத்தி இருக்கற மற்றவர்களையும் சமாளித்து நாமும் சரியான முடிவை எடுக்கறது எல்லாருக்கும் முடிஞ்ச ஒரு விஷயம் இல்லை.
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” – பழமொழி.
கோபம் வந்துட்டா மத்த எந்த விசயங்களையும் கணக்குல எடுத்துக்காம அதை அப்படியே அடுத்தவங்க மேல காட்டறவங்க தான் இங்க அதிகம். அவங்களோட சூழ்நிலை என்ன..? இவ்வளவு நாள் சரியா இருந்தவங்க இப்போ ஏன் இப்படி இருக்காங்க..? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நமக்கு பண்ணிருக்காங்களா..? இந்த மாதிரி எதைப் பத்தியும் மூளை யோசிக்காது.
இவன் நமக்கு இதைப் பண்ணிட்டான், அவ்வளவுதான். அடுத்தவர் நிலையில் இருந்து நாம் எப்போதும் யோசிப்பதே கிடையாது. இப்படிதான் மூளையும் தவறாக யோசித்து ஏற்கனவே நடந்த சில நிகழ்வுகளை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு சண்டைக்கு அழைக்கும். கோபம் நமக்குள்ள வந்துட்டா அறிவு வேலை செய்யாது. இது நூத்துக்கு நூறு உண்மை.
கோபம் மட்டுமல்ல அன்பு, விசுவாசம் போன்ற எந்த உணர்ச்சி மிகுந்தாலும் அது ஆபத்திலேயே கொண்டு சென்று விடும் என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் சோம.வள்ளியப்பன் அவர்கள். ஏற்கனவே பல உதாரணங்களை முதல் பாகமான இட்லியாக இருங்கள் புத்தகத்தில் பார்த்திருந்தாலும், இந்த இரண்டாம் பாகம் நமக்கு நமது உணர்ச்சிகளை சிறப்பாக கையாளக் கற்றுத் தருகிறது.
ஆசிரியைப் பற்றி சில வரிகள்..
பங்குச்சந்தை முதலீடு, சுயமுன்னேற்றம், நிர்வாகம், மனிதவள மேம்பாடு நேர மேலாண்மை, நிதி மேலாண்மை, விற்பனை, தலைமைப் பண்பு, சுய ஆளுமை மேம்பாடு மற்றும் உணர்ச்சி பற்றிய நுண்ணறிவு போன்ற பன்முகத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆசிரியர் சோம. வள்ளியப்பன் அவர்கள்.
இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 45-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் “இட்லியாக இருங்கள்” பதிவிற்குச் செல்ல…
want to buy : https://www.amazon.in/Emotional-Intelligence-Tamil-Soma-Valliyappan/dp/9386737272/ref=tmm_pap_swatch_0?_encoding=UTF8&qid=&sr=
#one_minute_one_book #tamil #book #review #self_help #soma_valliappan #emotional_intelligence #part_2 #best_seller
Leave a Reply