IAS எக்ஸாம் பத்தி உங்கள்ள நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கலாம். பத்து லட்சம் பேர் அப்ளை பண்ணி அதுல 3000+ முதல் நிலைத் தேர்வுல(Prelims) பாஸ் பண்ணி, அதுல 1௦௦0+ முதன்மைத் தேர்வுல பாஸ் பண்ணி இன்டர்வியூக்கு போனா, அதுல இருந்து தேவைப்படற 700+ ஆபீசர்ஸ UPSC செலக்ட் பண்ணுவாங்க.
இது எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..அதையும் தாண்டி இந்த புத்தகத்துல நிறைய விஷயங்கள் இருக்கு.
IAS ஆக என்னென்ன தகுதி வேணும்..? IAS-க்கு எப்படி அப்ளை பண்ணனும்..? எத்தனை முறை எழுதலாம்..? என்னென்ன போஸ்டிங் இருக்கு..? எங்க போஸ்டிங் போடுவாங்க..? இதைப் பத்தி சொல்றதுக்கு நிறைய புத்தகங்கள் இருக்கு.
எக்ஸாம் பாஸ் பண்ணதுக்கு அப்புறம் தெரிஞ்சுக்க வேண்டிய & செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. இரண்டு வருஷ பயிற்சி லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமி ஆட்சிப் பணிக்குத் தேவையான அனைத்தையும் கற்றுத் தரும்.
மேலும் இரண்டு வருடப் பயிற்சியில் அங்கு விளையாட்டில் இருந்து குதிரையேற்றம் வரை நிறைய விஷயங்கள் சொல்லித் தரப்படும்.
IAS ஆவதற்கு ஆங்கிலம் அவசியமா..? விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி..? IAS தேர்வில் நெகடிவ் மார்க் உண்டா..? வேலைக்குச் சென்றுகொண்டே IAS படிக்க முடியுமா..? தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்..? தேர்வில் செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை என்னென்ன..? என்பது போன்ற பொதுவாக அனைவருக்கும் இருக்கும் சந்தேகங்களுக்கும் சேர்த்து பதில் அளித்திருக்கிறார் வெ.இறையன்பு IAS அவர்கள்.
#one_minute_one_book #tamil #book #review #IAS_thervum_anugumuraiyum #v_irai_anbu #informative
want to buy : https://www.amazon.in/IAS-Thervum-Anugumuraiyum-Iraianbu/dp/8123408900
Leave a Reply