ஜீவா ஜீவா ஜீவா – Crime Novel

டாக்டர் மகேந்திரனும் கம்ப்யூட்டர் ஸ்டுடென்ட்டான லலிதாவும் இரவு-பகலாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு ஜீவா என்னும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தனர். மனிதனின் மூளையை விட பத்து மடங்கு அதிகமாக சிந்திக்கும் திறனுடைய ரோபோ (ஜீவா) இப்போது இருப்பது Indian Institute of Science-ல்.

டெல்லியில் இருந்து Indian Institute of Science செமினாருக்குக் கலந்துகொள்ள வந்திருந்த புரபொசர் தன்பாலும் மித்ராவும் ஜீவாவை சந்திக்க விரும்பினர். ஜீவாவின் செயல்திறனைப் பார்த்து வியந்த மித்ரா ஆக்கப்பூர்வமான இந்தக் கண்டுபிடிப்பு அழிக்கப்பட வேண்டியது என்று கூற, பிரிண்டர் வசதியுடன் உருவாக்கப்பட்டிருந்த ஜீவா பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு தாளை வெளியேற்றியது.

அதில்…

“விஞ்ஞான வளர்ச்சிக்கு உபயோகப்படப் போகிற என்னை அழிக்க வேண்டும் என்று சொல்கிற புரபொசர் மித்ராவை நான் வெறுக்கிறேன்.”

ஜீவாவைப் பற்றிய மித்ராவின் எண்ணத்தை மாற்ற மகேந்திரனும் லலிதாவும் மித்ராவின் வீட்டிற்குச் செல்கின்றனர். ஆனால், ஜீவாவின் வெறுப்பை அலட்சியப்படுத்திய மித்ரா அன்னோன் ரேஸ் (வித்தியாசமான கதிர்) தாக்கி அடுத்தநாள் காலையில் முதுகில் ரத்தப்பொத்தலுடன் இறந்து கிடக்கிறார்.

இந்நிலையில் பாதுக்காப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜீவா தப்பித்துச் சென்றது உறுதியாக மித்ராவைக் கொலை செய்தது ஜீவா தான் என்ற முடிவுக்குப் போலீஸ் வருகிறது. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனும் அவினாஷும் ஜீவாவைத் தேடிக்கொண்டிருக்க, ஜீவாவைக் கண்டுபிடித்த மகேந்திரனை விசாரிக்க வீட்டிற்குச் சென்றபோது மகேந்திரன் அங்கே இல்லை.

அதே நேரத்தில் லலிதாவும் காணாமல் போயிருக்க, அவளுடைய அறையை சோதனையிட்ட போலீசாருக்கு ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் ஜீவாவிடம் இருந்து அமைச்சர் கரிகாலனுக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வழியாக வருகிறது.

போலீஸ் காவலையும் மீறி ஜன்னல் வழியாக அன்னோன் ரேஸை செலுத்தி கரிகாலனைக் கொல்கிறது ஜீவா. போலீஸ் யூகத்தின் படி ஜன்னலில் இருந்து ரேஸ் வந்த திசையான ஹோட்டலை நோக்கி போலீஸ் படை விரைய, அங்கிருந்து அரைமணி நேரத்திற்கு முன்பே மகேந்திரனும் லலிதாவும் ரூமை காலி செய்திருந்தனர்.

ஜீவாவின் அடுத்த குறி ஃபிலிம் டைரக்டர் ரத்ன குமாரன். இதற்கிடையே புரொபசர் தன்பாலுக்கு வைக்கப்பட்ட குறி தப்பி டிரைவர் செத்திருந்தான். நல்லவேளையாக தன்பால் மயக்கத்தில் இருக்க, கார் நின்ற இடத்திற்குச் சற்று தள்ளி ஒரு மரத்திற்குப் பின்னால் ஜீவாவின் காலடி இருந்தது.

கதையின் திருப்பமாக யாரும் எதிர்பாராத விதமாக மகேந்திரனும், லலிதாவும் இருட்டான ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்க, ஜீவாவின் பெயரில் கொலைகளை செய்து வருவது யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #jeeva_jeeva_jeeva

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading