விதி புதிது..! – Crime Novel

பெற்றோரை இழந்த வசந்தி சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். தோழி கல்பனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து தகவல் கொடுக்காமல் இரவில் அவள் வீட்டை அடைகிறாள் வசந்தி. கல்பனாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது.

விவரம் அறியாத வசந்தியைப் பின்தொடர்ந்து வந்த தேவ்-ரஷ்மி இருவரும் கல்பனாவைத் தேடி வந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். கல்பனாவிற்கு தெரிந்தவர்கள் என்று நம்பி அவர்கள் வீட்டிற்குச் செல்கிறாள் வசந்தி. ஆனால், பலான தொழில் செய்யும் தேவ்-ரஷ்மி இருவரும் அவளை இந்தத் தொழிலுக்குத் தள்ளத் திட்டம் போடுகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக அவர்கள் வீட்டில் இருந்து தப்பித்த வசந்தி வழியில் வந்த ஒரு டாக்ஸியில் ஏறுகிறாள். டாக்ஸி டிரைவரான தர்மராஜ் வசந்தியின் நிலையை அறிந்து அவளுக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறான். மறுபடி கல்பனா வீட்டிற்குச் சென்றால் எப்படியும் தன்னை இழிதொழிலுக்குத் தள்ளிவிடுவார்கள் என்று அறிந்த வசந்தி தர்மராஜின் வீட்டிலேயே தங்க முடிவு செய்கிறாள்.

சதித்திட்டம் தீட்டிய தேவ்-ரஷ்மி இருவரும் போலீசுடன் தர்மராஜின் வீட்டிற்கு வருகின்றனர். எந்த ஆதரவும் இல்லாத வசந்தியை தர்மராஜ் ஏமாற்றி வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக தேவ்-ரஷ்மி போலீஸிடம் கூறுகின்றனர். தேவ்-ரஷ்மியுடன் செல்ல மறுத்த வசந்தியை தர்மராஜ் அப்போதே கல்யாணம் செய்து கொள்கிறான்.

எப்பாடுபட்டாவது வசந்தியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நினைத்த தேவ்-ரஷ்மி இருவரும் சேர்ந்து அவளைத் தங்கள் வலையில் வீழ்த்த வேறொரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி கூலிப்படையினர்  தர்மராஜை அரிவாளால் வெட்டி சாய்க்கின்றனர்.

அதன்பின் வசந்தியின் நிலை என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vithi_puthithu

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: