பொன்னி

இதுதான் ஷான் அவர்களின் புனைவு தொடங்கும் இடம். ஆயிரமாயிரம் வருடங்களாக தனது ரகசியத்தையும் தன் மன்னருக்குத் தந்த சத்தியத்தையும் காப்பாற்றும் இரணிய சேனை மற்றும் தேரை இன மக்கள்.

நியூயார்க் பெடரல் வங்கியில் திருடப்பட்ட ஆறாயிரம் டன் தங்கத்தை மீட்க இந்தியா வரும் அமெரிக்க உளவுத்துறை.

இந்திய நிலங்களில் தங்கத்தைத் தேடி லண்டனில் இருந்து வரும் ஆதி மைன்ஸ் தலைவரான பொன்னி.

இவர்களை வைத்து நடக்கவிருக்கும் வெட்டாட்டமே “பொன்னி – இரணிய சேனை”

சமீபத்தில் KGF பட வரிசையை வாசகர்கள் பலரும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அதில் KGF பற்றியும் அங்கு இருந்த வாழ்க்கை முறை பற்றியும் உண்மையாக கூறப்படவில்லை.

ஆனால், பொன்னி ஒரு விறுவிறுப்பான ரகசியத்தைத் தேடும் கதைக்களமாக இருந்தாலும், KGF-இல் தங்கம் எடுத்துவந்த மக்களின் வாழ்வியலையும் பேசும் ஒரு புதினம்.

பொன்னை நீரில் அடித்து வந்ததால் கூட காவிரிக்கு “பொன்னி” என பெயர் இட்டிருக்கலாம்.

“இரணியத்தைப் பற்றிய கமுக்கமான தகவல்களை குறிப்பிட “இரகசியம்” என்ற கடவுச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்”.

இரணியம் – இரகசியம்

“இரணியம் – தங்கம், பொன், செல்வம்”

“இரகசியம் – கமுக்கம், மறை பொருள்”

மனித வரலாற்றில் இரகசியம் என்பது “அறியப்படாத உண்மைகள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

உண்மைகள் வரலாறுகளில் இருந்து நீக்கப்பட்டு இரகசியங்களாக மாற்றப்பட ஏதேனும் வலுவான நோக்கம் இருந்திருக்கலாம்.

இருந்தும் இரகசியமாக்கப்பட்ட வரலாறுகளைப் பற்றிய conspiracy-கள் உலகில் இருக்கத்தான் செய்கிறது. யாருக்குத் தெரியும் conspiracy கதைகளில் உண்மை சாயலும் இருக்கலாம்.

பண்டைய காலத்தில் உலகில் உள்ள சாம்ராஜ்யங்களிலும் இல்லாத அளவில் “இரணியம்” நம் தமிழ் மன்னர்களிடம் அள்ள அள்ள குறையாத வளமாக இருந்தது.

மர்மம் என்னவென்றால் அந்த மஞ்சள் உலோகத்தை பூமியின் அடி ஆழத்தில் இருந்து யாரால்? எப்படி? தமிழர்கள் அறுவடை செய்தார்கள். தமிழர்கள் வைத்திருந்த தங்கத்தின் மூலத்தைப் பற்றி எந்த கல்வெட்டுகளும் இலக்கியங்களும் பேசாததன் மர்மம் என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #iraniya_senai #ponni #shan_karuppasami

want to buy : https://www.amazon.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-Ponni-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-Tamil-ebook/dp/B083D36S84

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: