ஒன்றில் இருந்து பத்துக்குள் ஒரு எண்ணை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவை முடிக்கும் வரையில் அந்த எண்ணை மறக்காமலும் மாற்றாமலும் வைத்திருங்கள்.
பலன் பதிவின் இறுதியில்…
வாசகர்களே..! நீண்ட நாட்களுக்குப் பிறகு பெலுடா கதை வரிசையில் ஒரு தாறுமாறான விறுவிறுப்பான நாவல். உங்களுக்காக!
காணாமல் போனதாக சொல்லப்படும் அந்த பொருள் இரண்டே அங்குலம் உயரம் உள்ள பிள்ளையார் சிலை. ஆனால், அது ஒரு அசாதாரண கலைப்பொருள்.
அதன் நடுவில் இருக்கும் பச்சை நிற வனஸ்பதி வைரமும்.. அதன்பின் இருக்கும் ஒரு பழைய வரலாறும் அதன் மதிப்பையும் அதன் மீது ஆசைப்படுபவர்களையும் அதிகரிக்கவே செய்தது.
ஃபெலுடா, தபேஷ், லால்மோகன் மூவரும் வாரணாசிக்கு வந்து இறங்குவதற்கு இரண்டு நாள் முன்பு தான் அது தொலைந்து போனதாக உமாநாத் கோஷால் கூறினார். விவரங்களை கேட்டு முடித்த ஃபெலுடா தனது புருவத்தை சுருக்கி, இந்த கேஸை எடுத்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.
வாசகர்களே..! கேட்பதற்கு எளிமையான இந்த வழக்கில் இருக்கும் பெரிய சிக்கல்களையும் சவால்களையும் ஃபெலுடா அனுமானித்திருப்பார்.
ஆனால், அனுமானங்களுக்கு அப்பாற்பட்ட இந்தக் கதையின் போக்கில், ஃபெலுடா தனது வலிமையான ஒரு எதிரியையும், ஒரு புத்திசாலியான சிறுவனையும், கடலிலே வாழும் மீன் சாமியாரையும் சந்திப்பார். ஒவ்வொரு சந்திப்பிலும் விசாரணை வேறுவேறு பரிமாணத்தை எட்டும்.
எட்டும் என்றதும் நினைவிற்கு வந்தது. நீங்கள் நினைத்த எண் “7” எனில், 1 to 10-க்குள் ஒரு எண்ணைக் கேட்டால் 70% பேர் “7” என்ற எண்ணையே சொல்வார்கள்.
“பிள்ளையாரைக் கண்டுபிடிக்க உதவும் முதல் clue-வை உங்களுக்காக இங்கேயே கொடுத்துவிட்டேன்.”
ஆனால், இந்தக் கதையை எழுதிய “சத்யஜித் ரே ” கதை முழுவதும் பிள்ளையாரை கண்டுபிடிக்க clue-வை வைத்திருப்பார்.
அதை கவனித்த ஒரே ஆள் நம் ஃபெலுடா தான்.. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா..? என பாருங்கள்.
“தலை வெடிக்கும் கிளைமாக்ஸ்”-க்கு நான் கியாரண்டி.
#one_minute_one_book #tamil #book #review #feluda_series #feluda #satyajit_ray #v_p_ganesan #pillaiyarukku_pinne_marmam
want to buy : https://www.commonfolks.in/books/d/pilaiyaruku-pinne-marmam
Leave a Reply