காணாதது கண்டான் கோட்டை..?!
சுட்டெரிக்கும் வெயிலிலும் இருண்டு கிடைக்கும் காணாதது கண்டான் கோட்டை. பௌர்ணமி நாளன்று மட்டும் நீல நிறத்தில் ஒளிர்கிறது. அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன..?
அன்று..
அந்த மர்மத்தை ஆராய தொல்லியல் துறை தலைவர் பத்ரிநாராயணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு வேனில் விரைந்து கொண்டிருந்தது.
அடர்ந்த காட்டிற்குள் இருந்த அந்தக் கோட்டையை அடைவதற்குள் இருட்டிவிட, இரவு வனத்துறை செக்போஸ்ட் அருகிலேயே டென்ட் போட்டு தங்க முடிவு செய்கின்றனர். அப்போது அங்கு வந்த வனத்துறை அதிகாரியான சங்குண்ணி சொன்ன விஷயம் குழுவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
பிரசன்னம் பார்க்கத் தெரிந்த சங்குண்ணி, அந்தக் கோட்டைக்குச் செல்ல விடாமல் இவர்களைத் தடுக்கிறான். மேற்கொண்டு அந்தக் கோட்டைக்குள் நுழைந்தால், போகும்போது எட்டு பேராகச் செல்பவர்கள் திரும்பும்போது நான்கு பேராகத் தான் திரும்புவார்கள் என்று சொல்லி அவர்களை எச்சரிக்கிறான்.
அவனுடைய எச்சரிக்கையைப் பொய்யாக்க பத்ரிநாராயணன் அன்று இரவே காட்டுக்குள் செல்ல டிரைவர் மாணிக்கத்திடம் உத்தரவிடுகிறார். அனைவரும் அவரின் ஆணைப்படி அங்கிருந்து உடனே கிளம்ப, பாதி வழியில் பேய் மழை பொழிந்து ஒரு பெரிய மரம் பாதையை மறைத்து விழுந்துகிடக்கிறது.
எப்படியோ அடுத்த நாள் விடிந்து விட, கதையின் திருப்புமுனையாக முதலில் டிரைவர் மாணிக்கம் காணாமல் போகிறான். பின் அடிபட்ட தலையுடன் தள்ளாடியபடி வேன் இருக்குமிடத்தை வந்தடைகிறான். அடுத்ததாக அந்தக் குழுவில் இருந்த வருண் தொலைந்து போகிறான்.
நடந்த சம்பவங்களுக்கெல்லாம் காரணம் புரியாமல் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க..காணாதது கண்டான் கோட்டை பௌர்ணமி இரவில் மட்டும் ஒளிர்வதற்கான காரணம் என்ன..? மாணிக்கத்தைக் கடத்தியது யார்..? வருண் மீண்டு வந்தானா..? சங்குண்ணியின் பிரசன்னம் பலித்ததா..?
பரபரப்பான திருப்பங்களுடன், திக் திக் நிமிடங்களுடன் நம்மை மிரட்டும் நீல நிலா.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #neela_nila
want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=358
Leave a Reply