காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன தன்னுடைய மகள் பூமொழியின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக அம்பாள் அடிமை ஜோசியரிடம் ஆலோசனை கேட்கிறார் பைரவமூர்த்தி. அவர்களின் குடும்ப ஜோதிடர் சோழிகளை உருட்டிப் பார்க்கிறார்.
இப்போதிருந்து மிகச் சரியாக ஒரு லட்சம் வினாடிகளுக்குள் பூமொழியைக் கண்டுபிடித்து அவளை இந்த வீட்டிற்கு கூட்டி வந்தால் அவர்கள் இருவரையும் பிரித்துவிடலாம். குறிப்பிட்ட இந்த நேரத்தைத் தாண்டிவிட்டால் இனி பூமொழி நமக்கு கிடைக்க மாட்டாள் என்று சொல்கிறார் அம்பாள் அடிமை.
பூமொழியின் இரண்டு அண்ணன்களும் அவளை ஊர் பூராவும் வலைவீசித் தேடுகின்றனர். தங்கள் குடும்ப பாரம்பரியத்தைக் கெடுக்கும் வகையில் பூமொழி வேற்று சாதியைச் சேர்ந்தவனை விரும்புவதை அறிந்து கொலைவெறியில் அவனைக் கொல்வதற்கு அலைகின்றனர்.
ஒருபக்கம் மூத்த அண்ணன் வஜ்ரவேலு தேட, இன்னொரு பக்கம் இரண்டாவது அண்ணன் ராஜவேலு தேடுகிறான். இவ்வாறு தேடுதல் நடந்துகொண்டிருக்க, எதிர்பாராத விதமாக ரோட்டில் போனில் பேசிக்கொண்டிருந்த ராஜவேலுவை மர்ம நபர்கள் தாக்குகின்றனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறான் ராஜவேலு. ஒரே மகள் வீட்டை விட்டு ஓடிப்போன துக்கம் மறைவதற்குள் இரண்டாவது மகனை இழந்த சோகம் பைரவமூர்த்தியைத் தாக்கியது. ராஜவேலுவைத் தாக்கிய இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவில் அவனைத் தாக்கியது ஒரு பெண் என்பதைப் போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.
இதற்கிடையில் ராஜவேலுவைக் கொலை செய்தது நான்தான் என பூமொழி போனில் பைரவமூர்த்தியிடம் கூறுகிறாள். மேற்கொண்டு பூமொழியைத் தேடிக்கொண்டிருந்த வஜ்ரவேலுவும் கொலை செய்யப்படுகிறான். இரண்டு மகன்களையும் ஒரே நாளில் இழந்த பைரவமூர்த்தியின் நிலை என்ன..? வஜ்ரவேலையும், ராஜவேலையும் கொலை செய்தது யார்..? பூமொழி எங்கே சென்றாள்..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #oru_latcham_vinaadikal
want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=280
Leave a Reply