“பள்ளிக் குழந்தைகள் இருவரின் சம்பாஷணை..
டேய் எங்கம்மா சொன்னங்க டா..ராத்திரி நேரத்துல எங்கயும் தனியா வெளிய போகக்கூடாதாம்..பேய் பிடிச்சிகுமாம் டா..
அதற்கு இன்னொரு குழந்தை கேட்கிறது..
‘பேய்’னா என்ன டா..?
வெள்ளை சீலை கட்டிட்டு, கருகருன்னு கோரமான முகத்தை வெச்சிக்கிட்டு, வாயில ரத்தக்கறையோட, கால் தரையிலேயே படாம நம்மள வந்து தூக்கிட்டு போய் சாப்பிட்டிரும் டா..
இந்த விசயத்தைக் கேட்ட அந்த இன்னொரு குழந்தை அடுத்தநாள் அநேகமாக காய்ச்சலில் விழுந்திருக்கும்.”
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேச பயப்படும் ஒரு விஷயமாக இருப்பது பேய்களைப் பற்றி தான். காலை நேரத்தில் பேயைப் பற்றி கெத்தாக பேசுபவர்கள் கூட, ராத்திரி நேரத்தில் கடிகார முட்களின் ஓசையைக் கேட்டுப் பயப்படுவார்கள்.
உதாரணமாக சந்திரமுகி படத்தில் “பேய் இருக்கா..இல்லையா..? பேய் வரதுக்கு அறிகுறி எதாச்சும் இருக்கா..?” என்று முருகேசன் கேட்பது போல..
இப்ப புத்தகத்துக்குள்ள போலாம்..
தலைப்பைப் படித்தவுடன் அநேகம் பேர் இந்தப் பதிவு எதைப் பற்றியது என்பதைக் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம், இந்த உலகில் இன்று வரை நிரூபிக்கப்படாத, நிரூபிக்க முடியாத ஒரு விஷயமாக இருக்கும் ஆவிகள், ஸ்பிரிட், மீடியம், பிசாசு, கோஸ்ட், பேயைப் பற்றிப் பேசக்கூடிய புத்தகம் தான் இது.
அப்படி என்ன சொல்லிருக்கப் போறாங்க..? யூசுவலான பேய்க் கதைகள் தானே அப்படின்னு நினைச்சிங்கன்னா..? அதுதாங்க கிடையாது. பேய்க் கதைகளிலேயே வித்தியாசமான, மாறுபட்ட, படிப்பதற்கு சுவாரஸ்யத்தையும், மனத்துக்குள் விறுவிறுப்பைக் கூட்டி, படிப்பவருக்குள் பரபரப்பை ஏற்றிவிடக்கூடிய ஒரு புத்தகம் தான் இந்த கோஸ்ட்.
எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்படி..புத்தகத்தை ஓபன் பண்ணி படிச்சு தெரிஞ்சுக்கோங்க..கோஸ்ட் பத்தி..
என்னால ஒரே ஒரு கியாரண்டி தர முடியும்..அது என்னன்னா..
இது கோஸ்ட் புத்தகம்ங்றதால நீங்க நைட் இதப் படிக்க முடியாதுன்னு இல்ல..இந்தப் புத்தகத்தை நீங்க நைட் கூட படிக்கலாம். அதுதான் இந்த புக்கோட ஸ்பெஷலே..
ஆனா, எத்தனையோ பேர் தூக்கத்தைத் தொலைக்கப் போறதுக்கு இந்தப் புத்தகம் காரணமா இருக்கப் போகுது.
குமுதம் இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற ரா.கி.ரங்கராஜன் அவர்களின் பயமுறுத்தும் நாவல்.
படிச்சிட்டு உங்க கருத்தைக் கமெண்ட்ல பதிவு பண்ணுங்க..
#one_minute_one_book #tamil #book #review #amanushyam #ghost #ra_ki_rangarajan
want to buy : https://www.amazon.in/Ghost-Tamil-Ra-Ki-Rangarajan-ebook/dp/B07TTD3XWY
Nice✨