DAY10 | நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா..?!

முகத்தில் சிறு சிறு சலனங்களுடன் போலீஸ் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார் டாக்டர் இந்துவதனா. அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒன்று அந்த அறையில் நிகழ்ந்தது. டாக்டர் இந்துவதனா தனக்குத் தானாகவே விஷ ஊசியைப் போட்டுக்கொண்டாள். அனைவரின் சாட்சியாக நிமிட நேரத்தில் நிகழ்ந்த தற்கொலை. சிகிச்சைப் பலனின்றி இறந்து போனாள். சில மணி நேரங்களுக்கு முன்… குரு, சங்கவி, மனோ, ஸ்ருதி நால்வரும் போலீஸ் ஆபிசர் நவநீதனுடன், டாக்டர் இந்துவதனாவை சந்தித்து, கயல்விழி என்ற இளம்பெண்ணைப் பற்றித் தெரிந்துகொள்ள குட்... Continue Reading →

DAY09 | ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட்

தொலைந்துபோன புது காரைக் கண்டுபிடிக்கச் சென்ற போலீசிற்கு அந்தக் காரின் உள்ளே ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் உடலில் கறுப்பு பெயிண்ட்டை ஊற்றியிருந்தார்கள். போலீசிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கொலையைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்க அதிரா அப்பார்ட்மெண்ட்டிற்குச் செல்கிறார் போலீஸ் ஆபிசர் சந்திரசூடன். ஆனால் அங்கு அவருக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மர்மங்களுக்குப் பெயர் போன அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றனர். மயானத்தின் மீது... Continue Reading →

DAY08 | பால் நிலா ராத்திரி..!

மயக்கம் தெளிந்து கண்விழித்த வனிதா, ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை எண்ணி கலக்கமடைகிறாள். தன்னுடைய கைகள் வளையத்தில் மாட்டப்பட்டிருக்க, சற்றுமுன் நடந்த சம்பவங்களை பயத்துடன் மனதிற்குள் அசைபோடுகிறாள். சூப்பர் மார்க்கெட்டில் பர்சேஸ் முடித்துவிட்டு டாக்ஸியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வனிதா, மயக்க மருந்தின் உபயத்தால் வண்டியிலேயே சரிய, டிரைவர் அவளை அந்த இடத்திற்குக் கொண்டு வந்தது தெரியவருகிறது. பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த வனிதாவிற்கு மீண்டும் மயக்க மருந்தை செலுத்தி, அவளுடைய இருதயத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டான் அவன். வனிதாவைத் தேடி... Continue Reading →

DAY07 | விவேக்கின் விஸ்வரூபம்

ஃப்ளைட் 747 பயணிகளுடன் பறக்கத் தயாராகக் காத்திருந்தது. அன்றைக்கு அந்த விமானத்தில் லண்டன் வரை பறக்க இருந்த பயணிகளில் நிறைய பேர் பிரபலமானவர்கள். இதில் விவேக்கும் ஐபிஎஸ் கிரணும் அடக்கம். ஸ்காட்லான்ட் யார்டின் ஆண்டு விழா செலிப்ரேசனில் கலந்து கொள்வதற்காகச் செல்கின்றனர். ஏற்கனவே வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் ஃப்ளைட்டை எடுக்க பைலட் பகாடியாவும் நிரம்ப யோசித்தார். கடைசியில் ஃப்ளைட்டை எடுக்க வேண்டிய கட்டாயம். விண்ட்ஸர் தீவைக் கைப்பற்றத் திட்டம் போட்டிருந்த கிம்போ... Continue Reading →

DAY06 | 50kg தாஜ்மஹால்..?!

டிவியில் பரதநாட்டிய புகழ் ஜோதிகாவின் பேட்டி முடிந்து போயிருக்க, ஜோதிகா டிவியை நிறுத்த நினைத்த விநாடி டெலிபோன் அழைத்தது. எடுத்து பேசிய ஜோதிகாவிடம் பேசியது கோகுலன். எந்த கோகுலன்..? ஐந்து வருடங்களுக்கு முன்னால் மைக்கேலைக் காதலித்த ஜோதிகா சர்ச்சில் அவனைத் திருமணம் செய்து கொண்ட போது போட்டோ எடுத்த மைக்கேலின் பிரெண்ட் தான் அந்த கோகுலன். திருமணமான ஒருமணி நேரத்துக்குள்ளேயே அவனுடைய சுயரூபம் தெரிந்து மைக்கேலின் முகத்தில் மோதிரத்தை விட்டெறிந்து விட்டு வந்தவள். பழைய நினைவுகளில் இருந்து... Continue Reading →

DAY05 | சொர்க்கத்தின் புதிய முகவரி..?

துணிக்கடையில் பர்சேஸிங்கை முடித்து விட்டு அப்போதுதான் வீடு திரும்பினர் உதயகுமாரும் வித்யாவும். வீட்டின் பூட்டைத் திறக்கச் சென்ற வித்யா அதிர்ச்சி அடைந்தாள். காரணம்..பூட்டப்பட்டிருந்த வீடு திறந்து கிடந்தது. திடுக்கிட்ட இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்க்க, அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன. வீட்டின் பின்புறம் சென்று பார்த்த வித்யாவின் கால்களில் ஏதோ ஒட்டியது. கீழே குனிந்து பார்த்த வித்யா வீறிட்டாள். இரத்தத் துளிகள்.. துணிச்சலை வரவழைத்துக்கொண்ட உதயகுமாரும் வித்யாவும் வீட்டை அலசுகின்றனர். ரத்தத் திட்டுகளைப் பின்தொடர்ந்து... Continue Reading →

DAY04 | அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்..?!

அவனுக்கு ப்ளட் கேன்சர் என்பதை அறிந்த நிமிடத்தில் இருந்தே நடைப் பிணமாக மாறிவிட்டிருந்தான் பரணி. ஆறு மாதம் மட்டுமே அவன் உயிருக்கு கெடு வைத்திருந்தார் டாக்டர். துக்கம் தாளாத அவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான். தூரத்தில் ஒரு ரயில் வருவது தெரிய, விழுவதற்காக தயாரானான் பரணி. கண்ணை மூடிக்கொண்டு அவன் ரயிலின் முன்னே பாய நினைத்த விநாடி ஒரு கை அவனை பின்னுக்கு இழுத்தது. பரணியைக் காப்பாற்றிய அவன் தன்னை சுபாஷ் என்று அவனிடம்... Continue Reading →

DAY03 | நம்ருதாவின் நாள்..

இடம் : கல்யாண ரிசப்ஷன் மணமேடையில் நின்றிருந்த மணமக்களான ஈஸ்வர்-நம்ருதா போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். அதே வேளையில் நம்ருதாவிற்கு ஒரு போன் வருகிறது. நூறு நாளில் நம்ருதாவின் வாழ்வில் விபரீதம் நிகழப் போவதாக அந்தக் குரல் மிரட்டிவிட்டு போனை வைக்கிறது. அதிர்ந்த அவள் ஈஸ்வரிடம் விசயத்தைச் சொல்ல அவன் அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அடுத்த நாள் அதே நபரிடம் இருந்து மீண்டும் ஒரு போன் வருகிறது. சந்திரவதனம் இவர்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருந்தான். கலக்கத்துடன் அந்த கிப்ட்டைப்... Continue Reading →

DAY02 | ரெட் ரோஸ் கெஸ்ட் ஹவுஸ்.!!

முதலமைச்சர் சத்தியவதியின் மகளும் மருமகனும் கடத்தப்பட்ட வீடியோ கேசட்டைப் பார்த்து திடுக்கிட்டான் விவேக். இடம் முதலமைச்சரின் வீடு. ‘நாளைய பாரதம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கடத்திப் பிணையாக வைத்துக்கொண்டு சில கோரிக்கைகளை முதலமைச்சரின் முன் வைக்கிறார்கள். ரெட்ரோஸ் கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றிருந்த முதலமைச்சர் மகளும் மருமகனும், 6 காவலாளிகளும் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து விசாரணையை ஆரம்பிக்க நினைக்கிறான் விவேக். அதற்கு முன்னரே கெஸ்ட் ஹவுஸில் விபரீதம் ஆரம்பித்திருந்தது. அதே வேளையில் பணக்காரர்களைக்... Continue Reading →

DAY01 | அமிர்தம் என்றால் விஷம்..!

காரில் இறந்து கிடந்த அமைச்சர் கார்மேகவண்ணனைப் பார்த்ததும் ரிப்போர்ட்டரான பாரி திடுக்கிட்டான். உள்ளே அமைச்சரின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடந்துகொண்டிருக்க, சக ரிப்போர்ட்டரான நிருபமாவிடம் தான் பார்த்த நிஜத்தை கலக்கத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான் பாரி. பிறந்தநாள் இறந்தநாளாக மாற, அமைச்சரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி. ‘அமிர்தம் என்றால் விஷம்’ என்ற எழுத்துக்கள் அமைச்சரின் முதுகில் பச்சை குத்தப்பட்டிருந்தது. கார்மேகவண்ணனின் மகன் செழியனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் கிடைக்காமல் போகவே, கேஸை வேறொரு... Continue Reading →

ராஜேஷ்குமார் நாவல்கள் – 10 Day Challenge

ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வழங்க இயலாத காரணத்தால், நாங்கள் உங்களுக்காக 10 சிறந்த, விறுவிறுப்பைத் தரக்கூடிய, மதிப்புமிக்க க்ரைம் நாவல்களைப் பற்றிய அறிமுகத்தைத் தர உள்ளோம். 10 நாட்கள் தொடரும் இந்த சவால் நாளை முதல் தொடங்க உள்ளது. ஒரு நாள் ஒரு நாவல். படித்து மகிழ்ந்திருங்கள். இணைந்திருங்கள் one minute one book உடன். #one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #10_day_challenge

Powered by WordPress.com.

Up ↑